பாம்பின் கண்

பாம்பின் கண், சு. தியோடர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்தளம், அம்பாள் பில்டிங், லாய்ட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html ஆவணம் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் முறையான வரலாற்றை ஆவணங்களோடு தெரிந்து கொள்வதற்கு நம்பகமான ஆய்வு நூல்கள் சிலவே உள்ளன. அந்த வகையில் 1997இல் தியோடர் பாஸ்கரன் எழுதிய த ஐ ஆப் செர்பண்ட் என்ற ஆங்கில நூல் முக்கியமானது. அதுதான் தற்போது பாம்பின் கண் என்ற பெயரில் […]

Read more

கரிகால் சோழன்

கரிகால் சோழன், டாக்டர் ரா. நிரஞ்சனாதேவி, விகடன் பிரசுரம், பக். 352, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-5.html இலங்கையை வென்று, 12000 சிங்களரைக் கைதியாகக் கொண்டு வந்து கல்லணை கட்டுவதற்கு அவர்களையும், மற்ற மன்னர்களையும் கரிகாலன் ஈடுபடுத்தினார். உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழக பொறியியல் தொழில்நுட்பத்தின் தொன்மை அடையாளம் ஆகவும், கல்லணை, 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை இந்த நூல் வரலாற்று ஆதாரங்களுடன், பெருமையுடன் விளக்குகிறது. சோழ மன்னர்களில் கரிகாலன் என்ற பெயரில் நால்வர் உள்ளனர். இவர்களில் […]

Read more

கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கேராசிரியர் கி. வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சிசெய்தனர். கோவை, சேலம், தர்மபுரி,கொங்குநாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். கோவில் வரலாறு, கல்வெட்டு புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப் படங்கள் மூலமும், ஒவ்வொரு கோவிலாக நூலாசிரியர் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல எழுதியுள்ளார். […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, பக். 136, விலை 110ரூ. ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும் ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில், இந்நூலைக் கம்பன் அன்பர்களுக்கு அளித்துள்ளனர். அவர்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். இந்நூலாசிரியர் மு. ராமசந்திரன், நயத்தக்க நாகரிகத்துடன் தகுந்த சொல்லாட்சிகளுடன் நறுக்குத் தெரித்ததுபோல, நகைச்சுவை கலந்து, நூலை எழுதியிருப்பது, பேச்சில்மட்டுமல்ல எழுத்திலும் அப்படியே என்று நிலை நிறுத்துகிறார். இந்நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. பத்தும் பத்து […]

Read more

கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கி.வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ. பழந்தமிழகத்தின் மேற்குப் பகுதி கொங்கு நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு பண்பாட்டின் வளர்ச்சியில் பேரிடம் வகிப்பவை ஆலயங்களே ஆகும். ஆன்மிகம், கட்டக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஆலயங்கள்தாம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு கூறும் சாட்சியங்களாக நிற்கின்றன. அந்த வகையில் கொங்கு மண்டலத்திலுள்ள கோயில்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த பேராசிரியர் […]

Read more

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 72, விலை 35ரூ. போன்சாய் பூக்கள், அய்யாறு ச. புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், மனை எண். 236, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம், சிந்தாமணி, தஞ்சாவூர் 613010, பக்.112, விலை 80ரூ- அவரவர் வாழ்க்கையில், சினேகன், விகடம் பிரசுரம், சென்னை 2, பக். 208,விலை 95ரூ. தமிழக அரசின் புதிய ஊதியமும் ஓய்வு ஊதியமும், ந.கோவிந்தராசன், ஸ்ரீஜனனி பதிப்பகம், திருக்கோவலூர், பக். 152, விலை 100ரூ. ஆன்மீக இரகசியங்கள் கேள்வி […]

Read more

தடம் பதித்த மாமனிதன்-ரசிகமணி டி.கே.சி

தடம் பதித்த மாமனிதன்-ரசிகமணி டி.கே.சி, தி.சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசா என்க்ளேவ், புதிய எண்-10, பழைய எண்-18, வாசன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. ரசிகமணி என்றும் டி.கே.சி. என்றும் அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரந்த முதலியார் தென்காசி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததில் தொடங்கி, அவருடைய கல்லூரிப் படிப்பு, வழக்குரைஞர் பணி, இந்து அறநிலையத் துறை பணி, திருமண வாழ்க்கை, கம்பராமாயண ஈடுபாடு, கல்கி, ராஜாஜி, கவிமணி தேசிகவிநாயம் பிள்ளை, முதலிய அறிஞர்களின் தொடர்பு, வட்டத்தொட்டி அமைப்பின் இலக்கியப் பணி […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு […]

Read more

தி.க.சி. நேர்காணல்கள்

தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ. தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், […]

Read more

பட்டு

பட்டு, அலெசான்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்.120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html தமிழில் இத்தாலி நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீதுகொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் […]

Read more
1 2 3 4 5 6 11