நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, பக். 110, விலை 70ரூ. தமிழகத்தின், ஏழாவது அதிசயம் என்று, கானாடுகாத்தான் ஊரில் உள்ள செட்டிநாட்டு ராஜா அரண்மனையை படங்களுடன் அதிசயிக்கும் நூலாசிரியர், சொக்கலிங்கம் புதூர், ஆத்தங்குடி, காரைக்குடி, குன்றக்குடி முதலிய ஊர்களின் வாயிலாக செட்டிநாட்டின் முழுச் சிறப்பையும் சுருக்கமாய்த் தந்துள்ளார். பல வாழ்வியல் நூல்களை எழுதி, இன்று முழுமையுடன் வாழ்ந்து வரும், நூலாசிரியரின் இப்பயண நூல் நகரத்தார் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 20/4/2014.   […]

Read more

உளி எழுத்துக்கள்

உளி எழுத்துக்கள், யா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் சிற்பக் கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கற்களைக் குடைந்து அமைக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்பங்களும் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. சிற்பக்கலை பற்றி கண்ணையும், கருத்தையும் கவரும் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் பெருந்தச்சன் கரு. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி. குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்கிய சில்ப கலா பிரவீணா எஸ்.கே. ஆச்சாரி இவரது தந்தை. கன்னியாகுமரியில் 133 […]

Read more

பெண்ணினத்தின் பேரொளி

பெண்ணினத்தின் பேரொளி, அ. விசாலாட்சி, விஜயகுமார் பதிப்பகம், திருப்பூர், விலை 100ரூ. முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவு, ஆற்றல், துணிவு, திறமை முதலான சிறப்பியல்களை படம் பிடித்துக் காட்டும் புத்தகம். இதை, அழகிய நடையில் எழுதியிருப்பவர் திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி. பதவி ஏற்றபின் ஜெயலலிதா ஆற்றிய பணிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு இருக்கிறார் மேயர் விசாலாட்சி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக விளங்கும். நன்றி:தினத்தந்தி, 2/4/2014.   —- இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் […]

Read more

பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை […]

Read more

அடை மழை

அடை மழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-4.html எழுத்தாளர் ராமலக்ஷ்மி பன்முகத் திறன் கொண்டவர் என்பதைத் தமது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அடையாளப்படுத்தியிருக்கிறார். அழகியலோடு இவர் எடுத்த புகைப்படமே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அடைமழை புத்தகத்தின் அட்டைப் படமாகி அலங்கரிக்கின்றது. அடை மழையில் 13 சிறுகதைகள் நனைந்திருக்கின்றன. மேல்தட்டு, கீழ்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை மிக மிக யதார்த்தமாய், எளிய நடையில் கிராமிய […]

Read more

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம் (இரு நூல்கள்), லக்ஷ்மிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை தலா 40ரூ. நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை பார்க்கும்போது, சொந்தமாக ஒரு குடிசை வீடு கட்ட கையளவு நிலமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை. அதற்காக பல வருடம் கஷ்டப்பட்டு குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கிய பின், அதில் வில்லங்கம் முளைத்தால், பெரும் ஏமாற்றமாகிவிடும். எனவே நிலம் வாங்குவது, விற்பது குறித்த முழுமையான விபரங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பாக […]

Read more

அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு (முதல் பகுதி), பி.டி. சீனிவாச அய்யங்கார், தமிழாக்கமும்-திறனாய்வும் புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்கும் நூல் இது. மூல நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையில் துணைப் பேராசிரியராக (1928-29) பணியாற்றியபோது, மேற்கொண்ட ஆய்வுப் பணியின் விளைவே இந்த நூல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததுடன், திறனாய்வும் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். ஏனெனில், சங்க இலக்கியங்களின் சிறப்பு, தமிழ், தமிழர்களின் பழம் […]

Read more

த மியூசிக் ஸ்கூல்

த மியூசிக் ஸ்கூல், செழியன், த. மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சாலி கிராமம், சென்னை, விலை 7000ரூ. திரைப்படங்களில் நடிகர்களோ நடிகைகளோ, தங்கள் இரு கைகளாலும் பியானோவோ, கீ போர்டோ வாசிக்கும்போது, பல சமயம் நாமும் அப்படி ஒரு கணம் வாசிப்பது போன்று சிறு பிரம்மை, நம்மில் பலருக்கு தோன்றி மறையும். அந்த இசையின் நாதமும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் அப்படி எண்ணவைக்கும். அந்த எண்ணத்தை நனவாக்கித் தர வந்திருக்கிறது தி மியூசிக் ஸ்கூலின் இந்த பத்து புத்தகங்கள். இசை உங்கள் வாழ்வில் என்னென்ன மாயங்கள் […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more
1 5 6 7 8 9