கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.   —- நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ. இறைவனை […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. இன்றைய காலகட்டத்தில் சில விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதில் பட்டதாரிகளே தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சரிவர படிக்காதவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு துறைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சரிவர நிரப்பாததால், அவை நிராகரிக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பணியை இழந்தவர்கள்கூட இருக்கிறார்கள் என்ற தகவலே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவிக்கும் பொக்கிஷமாக இந்நூல் வெளியாகி உள்ளது. அரசுத் […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html பண்டைத் தமிழ் மன்னர்கள் என்றாலே சில பிரபலமான பெயர்கள்தான் நம் ஞாபகத்துக்கு வரும். அவர்களைத் தவிர, வீரதீரம் காட்டிய எண்ணற்ற வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவ்வாறு தமிழ் மரபில் தோன்றி, தங்கள் வீரத்தால் பெருமை பெற்ற அதியன், குதிரைமலைப் பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், திருக்கிள்ளி போன்றோரைப் பற்றி வரலாற்று விவரங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியரான புலவர் கா. கோவிந்தன். […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

வெள்ளையானை,

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, மதுரை, விலை 400ரூ. To buy this Tamil book online: www.nhm.in/shop/100-00-0002-186-7.html ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சம், அந்தப் பஞ்சத்தில் மடிந்துபோய் வரலாற்றில் பதியப்படாத பெரும் தொகையிலான மக்கள், சாதி இந்துக்களால் கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள் இந்தச் சம்பவங்களின் பதிவே வெள்ளையானை நாவல். 1921ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தலித்துகள் புறக்கணிக்கிறார்கள். தலித் தலைவர் எம்.சி.ராஜாவின் வேண்டுகோளை ஏற்று, தலித் […]

Read more

தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, இலங்கையின் இன்னொருமுகம், இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர். தோட்டத்துக் கவிதைகள் தோட்டக்காட்டீ இலங்கையின் இன்னொரு முகம் என்கிற இரா. வினோத் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு நூல். இலங்கையின் மலையகத்தில் வசிக்கும் மக்களின் கதையை, அவர்களின் கண்ணீரை, அவல வாழ்வைச் சொல்கிறது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஏழைமக்கள், அடிதட்டு மக்கள் உலகின் பலநாடுகளில் தேயிலை, கரும்புத்தோட்டங்களில் அடிமைகளாக சிக்குண்டு பல தலைமுறைகள் கழிந்துவிட்டன. இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை இலங்கையராகவும் எண்ணாமல் இந்தியராகவும் எண்ணாமல் நாடற்றவர்களாகக் கருதும் காலமும் இருந்தது. அரசியல் […]

Read more

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும்

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும், வாலி எழுதிய எம்.ஜி.ஆர். படப்பாடல்கள், வாலி பதிப்பகம், சென்னை. தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்.ஜி.ஆர். எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more
1 3 4 5 6 7 9