இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ. படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, சந்திமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. நேர்மையும் நிர்வாகத்திறமையும் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் […]

Read more

காதல் நதி

காதல் நதி, லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தலைப்புக்கு ஏற்ப, காதல் கவிதைகள் நிறைந்த புத்தகம். மாதிரிக்கு ஒன்று, இளமையிற் கல் என்பதை உன்னைக் கண்டதும் இளமையில் காதல் எனத் திருத்திக் கெண்டேன். படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- நூற்றாண்டு நாயகர் பேரறிஞர் அண்ணா, எம்.எஸ்.தியாகராஜன், தமிழ்ச்சோலை பதிப்பகம், சென்னை, விலை 215ரூ. தனது அறிவாற்றலாலும் அயராது நூல் வாசிப்பாலும், அரசியல் சாணக்கியத்தனத்தாலும், சட்டசபை, பாராளுமன்றத்தில் நுட்பமான உரைகளால், சர்வ கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று […]

Read more

சிறுவாடு

சிறுவாடு, மாலிறையன் (இரா. கிருட்டிணமூர்த்தி), சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மரபுக் கவிதை நூல்கள் அரிதாகி வருகிற இன்றைய நிலையில் பல விஷயங்களை பாடுபொருளாகக் கொண்ட சிறுவாடு கவிதை நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் மாலிறையன். பாடல்கள் அனைத்திலும் இயல்பான சந்தமும், அழகும் கொஞ்சுகின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றை நூல் முழுவதும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- காணாமல் போன கவிதைகள், தங்கத்தாய் பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 140ரூ. பஞ்சபூதம், ஆறாம் அழிவு, இரக்கத்தின் சிலுவைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் […]

Read more

பலி கடாக்கள்

பலி கடாக்கள், அகில இந்திய மில்லி கவுன்சில், சென்னை, விலை 300ரூ. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் நம் நாட்டின் உளவுத்துறை, காவல்துறை ஆகியவை என்ன செய்து கெண்டிருக்கின்றன என்பதை விளக்கிடும் நூல். அரசு தான் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் நியாயப்படுத்திட தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்றது. இன்னும் ஒருபடி மேலேபோய் சட்டங்களை இயற்றிட தேவையான தீவிரவாத செயல்களை அரசே ஏற்பாடு செய்கின்றது. இதுபற்றிய பல்வேறு அறிக்கைகள், ஆவணங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான கைதுகள், […]

Read more

அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ. இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. […]

Read more

திருக்குறள் புதுக்கவிதை வடிவில்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில், காவ்யா, சென்னை, விலை 900ரூ. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனிதன் மகோன்னத நிலையடையும் நெறிகளையும் அறங்களையும் அழகாக சொன்னது திருக்குறள். அத்திருக்குறளுக்கு உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் பலர். சிலரது உரை சாமான்யர்களுக்கு புரிவது கடினம். அதனால் உரைநடையை வேறொரு கோணத்தில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தால் அனைவரும் படித்து இன்புறுவர் என்றெண்ணி இந்நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் கி.ரா. கிருஷ்ண பிரசாத். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- பகதூர்கான் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more
1 2 3 4 5 6 9