சகுந்தலா வந்தாள்

சகுந்தலா வந்தாள், வா.மு.கோமு, வெளியீடு நடுகல் பதிப்பகம், திருப்பூர், விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-266-1.html உருக்கும் வாழ்க்கை எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்துவிடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறுவென்று வந்திருக்கிறது. கல்பனா, ஜான், சகுந்தலா, கமலக்கண்ணன் என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் […]

Read more

ஞானம் நுரைக்கும் போத்தல்

ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன், ஆதிரை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 60ரூ. பெருங்கதையைத் திறக்கிற சாவிகள் குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. பேய்கள் மிகவும் நேர்மையானவை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பது இன்னும் […]

Read more

வளரிளம் பருவம்

வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ. மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.   —- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ. வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. புதுவையில் ஆசிரமம் அமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழி காட்டிய அரவிந்தர், அன்னை ஆகியோரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். அழகிய கட்டமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தினத்தந்தி.   —-   எளிய செரிமான உணவுகள், வை. குமரவேல் என்ற சகாதேவன், தாமரை  பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. உணவே மருந்து என்ற கருத்தை உணர்த்துவதற்காகவும், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியதை […]

Read more

உளிகள் வடித்த துளிகள்

உளிகள் வடித்த துளிகள், தலைமையாசிரியர் யா.ச.யாகு அடிகள், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், சிவகங்கை மாவட்டம், விலை 100ரூ. சிவகங்கை மாவட்டம், தேகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 27 ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். நல்லொழுக்கம் நலவாழ்வு, இதயம் ஒரு கோவில், ஏணியாய் தோணியாய என்ற தலைப்புகளில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.   —- வரலாற்று வெளிச்சத்தில் போர்த்துகீசியர்கள், குஞ்ஞாலிகள், சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 500ரூ. இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, வியாபாரம் செய்ய […]

Read more

யாரும் காணாத உலகம்

யாரும் காணாத உலகம், கோவி. லெனின், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 45ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-335-6.html பத்திரிகையாளர் கேவி.லெனின் ஒரு கவிஞரும்கூட என நிரூபிக்கும் நூல் இது. எளிய வார்த்தைகளில் சமூக அக்கறையும், பால்யத்தின் நினைவுகளும், காதலும் விரவிக்கிடக்கும் கவிதைத் தொகுப்பு இது. இயற்கையை கவிதைக்கு துணைக்கு அழைத்துக் கொள்ளும் கவிஞரின் சொற்கள் மிக இயல்பாக உள்ளன. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- மார்க்சிய சூழலியல், அருண் நெடுஞ்செழியன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, […]

Read more

சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல் திருமாவளவன், கரிசல் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-324-7.html பூவிழியன் தொகுத்திருக்கும் இந்நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலித் மக்களின் நலனுக்காக அவர் பேசிய பேச்சுகளும், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- தஞ்சை பெரியகோயில், முனைவர் வி.அ. அன்பழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை […]

Read more

நிகழ்காலம்

நிகழ்காலம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், சென்னை, பக். 126, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-276-3.html எதிர்காலத்திற்கான எச்சரிக்கை பருவநிலை மாற்றங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் அச்சமூட்டுகின்றன. உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் என்ற சொல்லாடல் கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ்ச் சமூகத்தில் இது குறித்து குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகச் சூழலில் பருவநிலை மாற்ற சிக்கல்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை முன்வைக்கிற பதிவாக பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் நிகழ்காலம் தமிழின் பசுமை இலக்கியத்திற்கு புதிய […]

Read more

துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், விலை 140ரூ. சமுதாயத்தின் சகல பகுதி மக்களின் துயரத்தை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தமிழன் என்றோர் இனம், மெய்யான ஜனநாயகம் என்பது, பார்க்கத் தவறும் கோணம் உட்பட 31 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட நூலாகும். இந்த கட்டுரைகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த அரசியல் திறவு கோலாக உள்ளன. நன்றி: தினத்தந்தி.   —-   கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாசன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 350ரூ. இது ஒரு புதுமையான […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more
1 4 5 6 7 8