மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

மனித நோய்கள்

மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் […]

Read more

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி, தமிழில் லா.சு.ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 224, விலை 100ரூ. இந்திய அரசியல் ஆன்மிகமும் தார்மீகமும் இழைந்ததாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தி, தனது ஆசிரமங்களின் கூட்டுப் பிரார்த்தனையின்போதுபாடுவதற்காகத் தேர்ந்தெடுத்த 253 துதிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். உபநிடதம், துவாதச பஞ்சரிகம், துளசிதாசர், துகாராம், ஏக்நாத், சூர்தாஸ், கபீர், மீராபாய், ஹரிதாஸ், குருநானக், இஸ்லாமிய சூஃபி பாடல்கள் மற்றும் பெயர் தெரிந்த பெயர் தெரியாத பக்திப் பாடல்கள் (வினோபா பாவே கூட ஒரு பாடல் […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

வீரசாவர்க்கர்

வீரசாவர்க்கர், ஷிவ்குமார் கோயல், தமிழில் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-1.html ஒரு போராளியின் கதை பாரதம் சுதந்திரம் பெறுவதற்காகப் பலரும் பலவிதங்களில் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்னும் வீர சாவர்க்கர். மிக அதிகமான தண்டனையை ஐம்பது ஆண்டுகள் கடுங்காவல் பெற்றவர் இவர். கொள்கையளவில் மகாத்மாவுடன் ஒத்துப்போக முடியாதவரான சாவர்க்கர் அவருடைய கொள்கைகளைத் தாக்கி, மராட்டி மொழியில் காந்தி கட்பட் என்று ஒரு நூலை எழுதினார். […]

Read more

பயத்திலிருந்து விடுதலை

பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ. தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் […]

Read more

உறங்கும் மனசாட்சி

உறங்கும் மனசாட்சி, ஆ. தமிழ்மணி, மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை, பக். 246, விலை 140ரூ. தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஈராக் பிரச்னை […]

Read more
1 119 120 121 122 123 336