சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி, விளக்க வடிவு சாமுவேல் சுதானந்தா, கயல்கவின் புக்ஸ், 28/ப.எண். 20, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 200ரூ. மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கம்போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் […]

Read more

நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பரபரப்பு கதாநாயகனாக வலம் வரும் நரேந்திர மோடியின் இளமைக்காலம்முதல், தற்போது மிரட்டிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகள் வரை அனைத்தையும் அலசி ஆராயும் தகவல் பெட்டகமாக இந்த நூல் திகழ்கிறது. அவரது ஆரம்பகால ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, நெருக்கடி காலத்தில் அவரது செயல்பாடுகள், குஜராத் முதல் மந்திரியாக அவர் ஆற்றிய பணிகள், குஜராத் […]

Read more

காவல்கோட்டம்

காவல்கோட்டம், சு. வெங்கடேசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 520ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-9.html தமிழகத்தில் பழங்காலந்தொட்டு காவல் தொழில் புரிந்தவர்கள், குற்றப் பரம்பரையினராக மாறிய வரலாற்றுப் பின்னணியில், மதுரை பகுதியின் 600 ஆண்டுகால வரலாற்றை அழமாக பதிவு செய்தபடி இந்த நாவல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படித்து முடிக்கும்போது, இதில் இடம் பெற்றுள்ள பல கதாபாத்திரங்கள், அன்றைய மக்களின் பண்பாடுகள், கலாசாரம் ஆகியவை மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து அமர்ந்துவிடுகின்றன. மதுரை மாநகரின் அமைப்பு, […]

Read more

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ. நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு சென்னை 20, விலை 25ரூ. அமரர் கல்கியின் புகழ் பெற்ற குறுநாவல்களில் ஒன்று மோகினித்தீவு. அது நவீன வடிவமைப்புடன் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ஸ்யாம் வரைந்துள்ள ஓவியங்கள், நூலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.   —- சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவ குணங்களும், மு. அண்ணாஜோதி, சந்தனத் தென்றல், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை 69, விலை 300ரூ. நமது திருக்கோவில்களின் […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more

சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

சிங்கப்பூரில் தமிழ் தமிழர், சௌந்தர நாயகி வயிரவன், குமுதம் பு(து)த்தகம், பக். 96, விலை 100ரூ. சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஆதிகால உறவு தொட்டு, இக்கால சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் வரையான ஒரு சிறப்புப் பார்வை இந்நூல். சிங்கப்பூரில் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழும் சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய பதிவுகள் கவனம் பெறுகின்றன. இன்றைய சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய ஒரு புரிதலுக்குத் துணை நிற்கும் நூல் இது. இந்நூல் ஆசிரியர் சௌந்தர நாயகி வயிரவன் சிங்கப்பூர் ஓர் முழுமையான பார்வை என்ற நூலை எழுதியவர் […]

Read more

திருப்பாவை அமுதம்

திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ. தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் […]

Read more

அகம் புறம் அந்தப்புரம்

அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 999ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, சமீப காலம் வரை இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள், அவர்களது நிஜ அந்தப்புர வாழ்க்கை ஆகியவை அப்படியே படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. தான் விரும்பிய ஒரு பெண்ணை மஞ்சத்தில் வீழ்த்த ஒரு மகாராஜா செய்த தகிடுதத்தங்கள், வளர்ப்பு நாய்க்கு ஆடம்பர திருமணம் […]

Read more
1 192 193 194 195 196 336