உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ. சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், தொகுப்பாசிரியர்-வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், சென்னை 1, பக். 560, விலை 350ரூ. இதுவரை ஒரே ஒரு என்.எஸ்.கிருஷ்ணனைத்தான் தமிழ்க் கலையுலகம் தந்துள்ளது. அவரது ஒப்புயர்வற்ற கலைப் பணியை சிந்தனைச் செல்வத்தை இதுவரை தோன்றிய எந்த நடிகனிடத்திலும் தமிழகம் பெற்றதில்லை என்று கலைவாணரைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலையுலகைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் கலைவாணரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர் வே. குமரவேல். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இந்தப் படைப்பு. ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம். மறுபுறம் அதே காலகட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு. இவை இரண்டும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால், இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் செல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண். நாவலின் உத்தி இவ்வாறு இருக்க, பாத்திரப் படைப்பில் ஆசிரியரின் […]

Read more

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், பா. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மெண்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக். 84, விலை 60ரூ. உலகில் தோன்றிய பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. பல நாகரிகங்கள் மறைந்துபோன நிலையில் இந்திய நாகரிகம் மட்டுமே இன்றைக்கும் புதுமைத் தன்மையுடன் விளங்குகிறது. அதற்குக் காரணம் இந்து தர்மம். அதன் உண்மைத்தன்மையும் விஞ்ஞான மெய்ஞான அடித்தளமுமே அதற்குக் காரணம் என்று நிறுவுகிறார் நூலாசிரியர் இலட்சுமணன். புஷ்பவிமானம், பிரம்மாஸ்திரம், மழை நீர் சேகரிப்பு என்று நம் […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 70ரூ. இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பிரிவு 356. இந்தப் பிரிவின் துணையுடன் பல மாநில அரசுகள், பல முறை கலைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்புகளுக்கான காரணத்தைத் தெளிவாக அலசுகிறது இந்த நூல். -முகிலை ராசபாண்டியன்.   —-   தீர்க்கதரிசி ராஜாஜி (நவ இந்தியாவின் சாணக்கியர்), சிவரஞ்சன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 35ரூ. 95 ஆண்டுகள் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த மூதறிஞர் 75 ஆண்டுகள் சுதந்திரப் […]

Read more

நானிருந்த வீடு

நானிருந்த வீடு, கதிர்பாரதி, பண்மொழி பதிப்பகம், 117, பழைய வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி, பக். 170, விலை 75ரூ. இது ஒரு கவிதைத் தொகுப்புதான். ஆனால் உள்ளடக்கத்திலோ உருவ அமைப்பிலோ இது இன்னவகை கவிதை என்ற சொல்லி விட முடியாதபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறள்வெண்பா, ஹைகூ என்று சுதந்திரமாக கையாண்டுள்ளார் கதிர்பாரதி. காதல், நட்பு, பாசம், இயற்கை, தத்துவம், சாதிமறுப்பு, விதவைமணம், குழந்தைகளுக்கு அறவுரை என்று ஒன்று விடாமல், நம் மனதில் விதைத்துப் போகிறார். முச்சங்கம் கண்ட மதுரையில் தமிழோடு […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 57 பி.எம்.ஜி. காம்பிளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை 17, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்களையும் அதே நேரத்தில் அவர்களது ஆழ் மனதில் வெளிவராமல் அமுங்கிக் கிடக்கும் விகல்பமான எண்ணங்களையும் ஒரே நேரத்தில் கூறி கதை சொல்லி இருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. அதுவே கதையின் வேகமான ஓட்டத்திற்கு காரணியாகவும் அமைந்து விடுகிறது. கதையின் காலமான 1860ல் தொடங்கி 1940 வரை நெடுகிலும் […]

Read more

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய […]

Read more

குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more
1 274 275 276 277 278 336