சிவதரிசனம்

சிவதரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html மொகஞ்சதாரோ காலத்திலேயே (கி.மு. 3250) சிவ வழிபாடு இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்ற. காலத்தால் மூத்த மிகப் பழமையான சிவ வழிபாட்டின் அருமை பெருமையை சிவலிங்கத் தத்துவம், பைரவர் தத்துவம், கணேசர் தத்துவம், முருகன் தத்துவம், நடராஜர் தத்துவம், போலோநாத் தத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இடையிடையே வடமாநிலங்களில் உள்ள […]

Read more

வாழ்வில் வசந்தம்

வாழ்வில் வசந்தம், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 220, விலை 60ரூ. ஊக்கமளிக்கும் வாழ்வு முன்னேற்ற நூல். உழைத்தால் முன்னேறலாம். வறுமையும் வசதிக்குறையும் ஒரு தடை அல்ல. தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்று நிறுவுகிறார் ஆசிரியர். சர் ஐசக் நியூட்டன் சாதாரணக் குடியானவர் குடும்பத்தில் பிறந்தவர். மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு கூலித் தொழிலாளியின் புதல்வர். டாக்டர். ம.பொ.சி, துவக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பைக்கூட முடிக்காதவர். முடியுமா? என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, […]

Read more

ஆகஸ்ட் 15

தடம்பதித்த மாமனிதன் ரசிககமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், விலை 250ரூ. முருகனுக்கா அறுபதாம் கல்யாணம்?, பாளையங்கோட்டை கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்றில் ரசிகமணி ஏசுநாதரின் உபதேசங்களை விளக்கிப் பேசினார். அதைக் கேட்ட பாதிரியார் ஒருவர் “கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் ஏசுவின் போதனைகளை டி.கே.சி.யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதயபூர்வமாக அவற்றை உணர்ந்து இருக்கிறார்” என்றார். கம்பராமாயணத்தை பெரியார் எதிர்த்து எரித்துக் கொண்டிருந்த நேரம். அவர் குற்றாலத்துக்கு வந்திருந்த செய்தியை ரசிகமணியிடம் சொன்னார் எஸ்.வி.எஸ். உடனே, ‘அடடா, நம் வீட்டுக்கு உணவருந்த அழைத்து […]

Read more

திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்)

திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்), தெகுப்பு: மு. சீனிவாசவரதன், ஸ்ரீஅருணகிரி நாதர் விழாக்குழு, திருவண்ணாமலை 606601. பக்.104, விலை 40ரூ. முருகன் அருள்பெற்று சந்தகவி பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழை ஓதினால் நம் தீவினைகள் ஒழிந்து வாழ்வு சிறக்கும், மனமாசைப் போக்க ஒரேவழி முருகப்பெருமானை வழிபடுவதுதான். முருகனை நினைத்துவிட்டால் பகலவனைக் கண்ட பனிபோல துன்பம் நீங்கிவிடும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழும் உயிர்த்தத்துவமும், திருப்புகழும் வாழ்வியல் தத்துவமும், திருப்புகழ் ஓதினால் தீவினை நீங்கும். திருமுரகனின் அருள் கிடைத்தால் வாழ்வியல் சிறக்கும், முருகனின் கருணை எப்படிப்பட்டது? எனப் […]

Read more

மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more

காலச்சுவடுகள்

காலச்சுவடுகள் – தெலுங்கு மூலம், நவீன், தமிழில் – இளம்பாரதி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. பக். 1045, விலை 545ரூ. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ரீஸ்ரீ த.நா.குமாரசாமி, சுந்தர ராமசாமி ஆகியோர் மொழிபெயர்த்த நாவல்களைப் போன்ற அதே மொழிபெயர்ப்பை இந்த தெலுங்கு நாவலில் காண முடிகிறது. கதை மாந்தர்களின் உரையாடல் அனைத்தும் பேச்சு வழக்கில் மிக எளிமையாக நம் கிராமத்துக் கதை போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே தோன்றுவதில்லை. வாரங்கல் அடுத்த ஒரு சிறு […]

Read more

மலையமான்கள்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) – தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம், வெளியீடு – காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 916, விலை 700ரூ. தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவரான தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் எழுத்தாளுமைகளை மொத்தமாகப் பதிவு செய்துள்ளது. நாட்டாரியம் என்பது ஆழ்ந்த புலமை, அகன்ற பாண்டித்யம், அரிய உரைவளம், நுண்ணிய ஆய்வு என்று பல பொருள் கொள்ளலாம். இவர் எழுதிக் குவித்த எண்ணற்ற இலக்கண, இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஒருங்கே தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். முதல் […]

Read more

இலக்கிய உலா

இலக்கிய உலா, முகில் தமிழ்ச் செல்வன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 208,விலை 135ரூ. அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்வு. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின்றி மற்றொன்று இல்லை. இரண்டும் ஒன்றியதே சங்கச் சால்பு. பண்டைத் தமிழர் மறமாண்பும் மறத்திலும் அறம் கருதும் மாட்சியும், வீரத்தோடு ஈரமும் மிகுந்த மாண்பும், பீடும் பெருமிதமும் அளிப்பன. இந்த அரிய சேர்ப்பு – வீரமும், ஈரமும், மறமும் அறமும் அருங்கலவை ஆகும். இந்த வீரம் செறிந்த பனுவல்களைப் பயிலும்போது, வீரம் விளைகிறது. மறம் […]

Read more

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்)

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்), சாரநாத கோபாலன், ஸ்ரீ விக்னேஸவரா வேங்கடேஸ்வரா டிரஸ்ட், சென்னை18, பக்,1316, விலை 500ரூ. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்துக்கு சிறப்புகள் பல உண்டு. மனதில் நினைத்ததை முடித்த அனுமன் கதை பேசப்படுவதால், சுந்தரகாண்டத்தைப பரிகாரப் பாராயணத்துக்கும் சிலர் பரிந்துரைப்பதுண்டு. ஆனால் வால்மீகி என்ற கவிஞரின் சிறப்பை உணர்ந்துகொள்ள சுந்தரகாண்டம் பெரிதும் கைகொடுக்கிறது. 68 அத்தியாயங்கள், அனைத்துக்கும் வடமொழி எழுத்துகளில் மூலம், தமிழில் மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு, வடமொழி எழுத்துக்களுக்கானப் பதவுரை ஆகியவை கவியினைத் தெளிவாக […]

Read more

சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும், ஆதி வள்ளியப்பன், தடாகம் பூவுலகின் நண்பர்கள், 12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. சிட்டுக்குருவிகளைக் காணவில்லை. ஏன்? செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணமால் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்தப் புத்தகம். அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது. ‘மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, நவீன அறிவியல் தொழில் நுட்பம்தான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணம் என்று பிரிட்டன் ஆய்வுகள் செல்கின்றன. குருவிகளின் அழிவுக்கு […]

Read more
1 292 293 294 295 296 336