தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், சென்னை, பக். 224, விலை 200ரூ. அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல் கி.பி. 1840ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு இந்நூல். அதோடு இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸின் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அரேபியத் தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணி, நபிகள் (ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ள முக்கிய அம்சங்கள், அவர்களின் மூலம் இறைவன் இவ்வுலகிற்கு அளித்த அல்குர் […]

Read more

வேதபுரத்து நாயகிகள்

வேதபுரத்து நாயகிகள், ச. கணபதிராமன், வெர்வோ பேஜஸ் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. பாரதி பாடிய தேச முத்துமாரி யார்? புதுச்சேரியின் பழைய பெயர்களில் ஒன்று வேதபுரம். அங்கு உள்ள மாரியம்மன் ஆலயங்கள், காரைக்கால் பகுதியை சுற்றியுள்ள அம்மன் கோவில்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் களஞ்சியமாக திகழ்கிறது இந்த நூல். வெறும் தகவலாக மட்டுமின்றி, அரிய செய்திகளை வரலாற்று பின்னணியோடு, இரண்டற கலந்து, இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர். மாரியம்மனை பற்றிய பழங்கதைகளில் அவள் வெப்பு நோய் தீர்ப்பவள் என்பது பரவலாக அறிய […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 350ரூ. இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நிலவி வரும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும், இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதியுள்ள நூல். இஸ்லாம் என்றால் என்ன? திருக்குர்ஆனும், ஹதீதும், இஸ்லாத்தின் தோற்றம், முஸ்லிம்களின் கடமைகளும் நம்பிக்கைகளும் போன்ற தலைப்புகள்ல் இஸ்லாம் குறித்த எதார்த்த நிலையை எளிமையாக தெளிவுபடுத்துகிறார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா? ஜிஹாத் என்பது […]

Read more

அறவாணரின் படைப்பிலக்கியங்கள்

அறவாணரின் படைப்பிலக்கியங்கள், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தலைசிறந்த ஆய்வறிஞர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் க.ப. அறவாணன். கலையும், இலக்கியமும் வாழ்க்கைக்காக என்னும் கருத்துடைய அறவாணரின் சிறுகதை மற்றும் நாவல்களை ஆராய்ந்து வீர. ஆதிபராசக்தி இந்த நூலைப் படைத்துள்ளார். அறன், அன்பு, ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்றவை அவரது படைப்புகளில் பரிணமிக்கின்றன. படைப்பிலக்கியங்களில் மனித சமுதாயத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதற்கு அவரது சிறுகதைகளும், நாவல்களும் முன்னோடிகளாக அமைந்துள்ளன என்பதை இலக்கிய தராசில் நூலாசிரியர் […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, தி. சந்தான கிருஷ்ணன், நிழல் வெளியீடு, பக். 140, விலை 150ரூ. தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ். பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதிவரை, படிப்பவர் கண் முன், படமாக விரிகிறது. கடந்த, 1941ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளதில், […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், கே. குருமூர்த்தி (மாயூரன்), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 172, விலை 90ரூ. வாயு புத்திரனாக அவதரித்த ஆஞ்சநேயர், மாருதி என்றழைக்கப்பட்டு பின்னர் அனுமனாக மாற்றம் பெற்றதாக அஞ்சனை மைந்தனின் கதை துவங்குகிறது. சிறுவயதில் அபார சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்டு விளங்கிய அனுமன், சூரிய பகவானிடம் வேத சாஸ்திரங்களையும், சகல கலைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்ததின் காரணமாக, பிற்காலத்தில் இராமபிரானால், நவவியாகரன் என்ற பாராட்டைப் பெறுகிறார். அனுமனின் பராக்ரமங்களை மிக அழகாக எளிய நடையில் சிறுசிறு கதைகளாகச் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. […]

Read more

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு, முவப்பிக்கா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 45ரூ. சமச்சீர் பெற்ற வாழ்வு திருமணத்தில்தான் உண்டு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. திருமணம் செய்யாதவன் என் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்பது நபி மொழி. அந்த வகையில், இஸ்லாத்தில் திருமணம் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது? திருமண உறவில் ஆணுக்கும், பெண்க்கும் எத்தகைய உரிமைகளும், கடமைகளும் உள்ளன? திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரு மணம் கொண்ட திருமண வாழ்வில் என்ற இந்த நூலில் உடன்குடி […]

Read more

வரலாற்றுச் சுவடுகள்

வரலாற்றுச் சுவடுகள் (நான்காம் பதிப்பு), தினத்தந்தி பதிப்பகம், விலை 650ரூ. தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற வரலாற்றுச் சுவடுகள் நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது வரலாற்றுச் சுவடுகள். இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட ‘கியூ’வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள […]

Read more

அன்பு நபியின் அமுத வாக்குகள்

அன்பு நபியின் அமுத வாக்குகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 240ரூ. ‘திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ என்று திருமறை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் பொன் மொழிகளை, மொழிகின்ற நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிஞர் மவுலானா முகம்மத் பாரூக் கான், நபி மொழிகளைத் தொகுத்து ‘கலாமெ நுபுவ்வத் என்ற பெயரில் அரபி மொழியில் ஆறு தொகுதிகளாக அளித்துள்ளார். அதில் ‘ஒழுக்கவியல்’ குறித்த பொன்மொழிகள் முதல் தொகுதியாக வெளிவந்துள்ளது. […]

Read more
1 74 75 76 77 78 128