அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ. பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும்

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும், குமாரதேவர் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 120, விலை 200ரூ. சங்க இலக்கியத்தில், கன்னிப் பெண்கள் நீர்த்துறையில் நீராடி, நமக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டி இறைவனைக் குறித்து நோன்பு நோற்று வழிபாடு நடத்தியதை தை நீராடல், மார்கழி நீராடல், பாவை நோன்பு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. இதை பரிபாடல் கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்றுவரை இப்பாவை நோன்பு பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகரும் ஆண்டாள் நாச்சியாரும் அருளிச்செய்த திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய […]

Read more

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும், சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 250ரூ. விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புகரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், […]

Read more

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள், மௌலானா முகம்மத் ஃபாரூக் கான், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பெரம்பூர், விலை 240ரூ. கவிதை மாதிரி ஓர் அறநூல் “மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. தவறிழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தான்.” இதற்கான விளக்கம் தவறிழைத்த பிறகு அதிலேயே உழன்று கிடைக்காமல் கணப்பொழுதுக்குள்ளாக செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு, மனம் நொந்து, வேதனையடைந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என மனம் பதைத்து அந்தக் கணத்திலேயே இறைவன் பக்கம் திரும்புகிறவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாவர் என்பதே. ‘இஸ்லாம் என்றால் […]

Read more

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ. உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார். இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

தேவதைகளின் வீடு

தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ. கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more

பூவின் இதழ்கள்

பூவின் இதழ்கள், த.கணேசன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. 50 விதமான கட்டுரைகளின் தொகுப்புநூல். இந்நூலின் ஆசிரியர் த.கணேசன், வானொலியில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை உண்மைச் சம்பவங்களை, கட்டுரை வடிவில் தந்துள்ளார். 35 ஆண்டுகால வானொலி வாழ்க்கையில் அவர் சந்தித்த மாமனிதர்களையும், மனித நேய நிகழ்வுகளையும், சுவையோடு ஒவ்கொன்றையும் ஒரு சிறுகதைப் பாங்குடன் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளைப் படிக்கும்போது மானுடத்தின் பல்வேறு முகங்களையும் தரிசிக்க முடிகிறது. ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும். பயிற்சி பெறவேண்டும் என்போர்க்கு இது ஒரு வழிகாட்டி நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 75 76 77 78 79 128