திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html உடலே மர்மம் இன்றைய எந்திர வாழ்வில் சாமானியனுக்கும் சரி, தொழில் சாம்ராஜ்யங்களைத் தாங்கி நிற்கும் கோடீஸ்வரனுக்கும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பளு மன அழுத்தம். வயிற்றுக்கான வேலை, குடும்ப அச்சின் சக்கரத்தை முன்நகர்த்துவது, இவற்றைத் தாண்டி சமூகம் சொடுக்கும் சாட்டை அடிகள் போன்ற சவால்களால் இவர்களுக்கு நன்றாக தூக்கம், ஓய்வு கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம் துக்கம்தான். இந்த மன அழுத்ததிலிருந்து […]

Read more

சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல் திருமாவளவன், கரிசல் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-324-7.html பூவிழியன் தொகுத்திருக்கும் இந்நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலித் மக்களின் நலனுக்காக அவர் பேசிய பேச்சுகளும், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- தஞ்சை பெரியகோயில், முனைவர் வி.அ. அன்பழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. புதுவையில் ஆசிரமம் அமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழி காட்டிய அரவிந்தர், அன்னை ஆகியோரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். அழகிய கட்டமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தினத்தந்தி.   —-   எளிய செரிமான உணவுகள், வை. குமரவேல் என்ற சகாதேவன், தாமரை  பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. உணவே மருந்து என்ற கருத்தை உணர்த்துவதற்காகவும், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியதை […]

Read more

வளரிளம் பருவம்

வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ. மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.   —- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ. வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் […]

Read more

எந்த வானமும் உயரமில்லை

எந்த வானமும் உயரமில்லை, ரமணன், ரீம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லி, விலை 25ரூ. சொந்தச் சிறகுகளால் தன்னடக்கம், எளிமை, பரிவு ஆகியவை ஆன்மிகத்துக்கான அடையாளங்கள், அல்லல்களுக்கு இடையே ஆள்தொலைந்து போகாமல் இருப்பதே வாழ்வதாகும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ரமணன். புல்லினும் அற்பமானது கவலை என்கிற அவர், கவலையைச் சரவெடி போல உருவகிக்கிறார். ஒரே ஒரு திரி, நூறு வெடிகள் என விளக்கவும் செய்கிறார். ஒருபோதும் நம்மை நாமே கைவிடலாகாது என்று உற்சாகமும் ஊட்டுகிறார் அவர். சாதாரண மனிதர்களை ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து […]

Read more

சுவாமி ராமாவுடன் எனது பயணம்

சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஐஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-336-9.html அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் ஓ பிரையன், தொடக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியராக இருந்தவர். இந்தியாவில் இமயமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதி சுவாமி ராமா, அமெரிக்காவில் பக்தி பிரசங்கம் செய்தபோது, அவரிடம் முரட்டுத்தனமான கேள்விகள் கேட்ட ஜஸ்டின் ஓ பிரையன், பின்னர் படிப்படியாக சுவாமி ராமாவின் முக்யி சீடராக மாறி, அவருடன் பயணித்தபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை […]

Read more

நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி. ஐசக். அருள்தாஸ் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-3.html தமிழக போராட்ட வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த தெற்கெல்லைப் போராட்டத்தின் தளகர்த்தர் மார்ஷல் நேசமணி. இவருடைய முழுமையான ஆளுமையை வெளிக்கொணரும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெண்ணடிமைக்கும், சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தொடங்கிய அவரின் சமூகப் பணி, குமரி மாவட்டம் உருவாவதற்கான உணர்வுப் போராட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தமிழக எல்லைக்களை […]

Read more

மகான் ஷைகு சாஅதி

மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம். கனி, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 184, விலை 100ரூ. இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதல் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more
1 81 82 83 84 85 128