கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ. மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் […]

Read more

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர் பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 210ரூ. இருக்கிற கடவுள்களும், இனி வரப்போகும் கடவுள்களும் கைவிட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெள்ளை மாடு வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசுத்தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நாகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்ப்பது ஒரு […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html கடந்த 1930களில் இந்தியாவில் நிலவி வந்த ஆன்மிக நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் பால் ப்ரன்டன். முதலில் வட மாநிலங்களில் உள்ள யோகிகள், சாதுக்கள் ஆகியோரைச் சந்தித்து விட்டு, தென் இந்தியாவை நோக்கிப் பயணப்பட்டு, வழியில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை, ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ. விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். […]

Read more

ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன், பசுபதி தனராஜ், தாய்த் தமிழ் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-189-0.html மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும் 10 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மகன், தலைமைச் செயலர், கவர்னர் என உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more

ஜென்னல்

ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும் என்று ஆசி வழங்கினாராம் அந்த ஞானி. மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்? என்று வேறு அவர் கேட்டாராம். இந்த ஜென் கதையை […]

Read more

குடி விடு

குடி விடு, ப. மோகன்தாஸ், வெளிச்சம் பதிப்பகம், மதுரை, விலை 50ரூ. மதுவை மறந்து மனைவி மக்களை காப்பதற்கு தன்னிலை உணரவேண்டும் என்பதை மையமாக வைத்து குடியின் கொடுமையை படத்துடன் விளக்கப்பட்டுள்ள நூலாகும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- நான் சொல்வது பொய்யாகுமோ?, ஜனார்த்தனன், மணிமேகலை பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. சிறுகதைகளுக்கு பக்க வரம்பு கிடையாது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் சின்னச்சின்ன கதைகள். ஆயினும் நச் என்று இருக்கின்றன. மனதைத் தொடுகின்றன. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- காவிரி ஏன் தோற்றோம்? […]

Read more

கீதாஞ்சலி

கீதாஞ்சலி, தாகூர், தமிழில் சி. ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 125ரூ. இரவீந்திரநாத் தாகூர் நோபல்பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு நூல். தேசம், மொழி, இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, ஆன்மா, ஆற்றாமை, காத்திருப்பு, மரணம் என வாழ்வின் அனுபவங்களை தாகூர் அளவிற்கு உணர்வுபூர்வமாக யாரும் எழுதிவிடமுடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதைகள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையில் விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. இறுகிப்போன வயலை உழும் உழவன், வேர்வை சிந்தி கல்லுடைக்கும் தொழிலாளி, […]

Read more
1 56 57 58 59 60 80