1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் […]

Read more

சார்வாகன் கதைகள்

சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ. சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம் என்று கூறியுள்ளார். […]

Read more

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ. சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more

ஜெயந்திசங்கர் சிறுகதைகள்

ஜெயந்திசங்கர் சிறுகதைகள், ஜெயந்திசங்கர், காவ்யா, சென்னை, பக். 965, விலை 880ரூ. சிறுகதை, சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சமூக இலக்கியம். அவசர உலகில் பயணிக்கும் இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்றவாறு, இதழ்களில் ஒரு பக்க கதைகளாகப் புதிய பரிணாமம் பெற்றிருக்கும் சிறுகதையின் உலகத்தில், ஜெயந்தி சங்கரின் சஞ்சாரம் சிறுகதை இலக்கியத்துக்கான மைல் கல்லாக இருக்கிறது. வாசகன் புரிந்து கொள்ளும்படியான ஒரு படைப்பாளிக்கான இலக்கணத்தையும் முன்வைத்துள்ளது. அன்றாடம் நம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களை, இவரது கதைகளின் மூலம் மீண்டும் நாம் பெற முடிகிறது. அங்கங்கே […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்-பேரா. மு. சாயபு மரைக்காயர், வெளியீடு-கங்கை புத்தக நிலையம், சென்னை, விலை 90ரூ. மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற 6 பெருந்தலைப்புகளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 53 கட்டுரைகளைக் கொண்ட நூல். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் உணர்வையும், தமிழ் இனப்பற்றையும், எடுத்துக்காட்டும் வகையிலும், சமயப் பூசல்களையும், சாதி கொடுமைகளையும், கடவுள் மறுப்பையும், பெண்ணடிமைத்தனத்தையும், தொழிலாளர் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —–   கண்ணன் கதைகள், […]

Read more

அம்மா சொன்ன குட்டிக் கதைகள்

அம்மா சொன்ன குட்டிக் கதைகள், தொகுப்பு-சே. இளையகுமார், முத்துக்குமரன் பதிப்பகம், திண்டுக்கல், சென்னை 125ரூ. தமிழக மக்கள் வாழ்க்கையில் கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளது. இதனால் கதை மூலமாக சொன்ன கருத்துக்கள் மிக எளிதாக மக்களை சென்றடைவதால், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கதை மூலமாக பல நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அடங்கிய குட்டிகதைகளை மேடைகளில் கூறிவருகிறார். முதல் அமைச்சரின் 66வது பிறந்த நாளையொட்டி 66 கதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்று ஓவியங்களையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 336, விலை 190ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி, இந்துக் கலாச்சாரத்துடன் ஒன்றாகக் கலந்து சகோதரத்துவத்துடன் அவர்கள் ஆட்சி செய்தது வரையான ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். ஆங்கிலயர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் வரலாற்றைத் திரித்து எபதிதப்பான அபிப்ராய பேதங்களை உருவாக்கிவிட்டுச் சென்றனர். இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்தது. அந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து உண்மையை விளக்கி, […]

Read more
1 55 56 57 58 59 80