போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

நடன மங்கை

நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். இந்தக் கதைகளைத் தேர்வு செய்தது பற்றியும், கதைகளின் சிறப்பு பற்யும் விளக்கி, ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 22 பக்க முன்னுரை நன்றாக உள்ளது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உள்பட சில எழுத்தாளர்களின் 3 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில எழுத்தாளர்களின் 2 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ராமகிருஷ்ணனின் 2 […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 350ரூ. தமிழ்நாட்டில் புகழின் சிகரத்தைத் தொட்ட எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஆரம்பத்தில் சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்த அவர், 60களில் ஆனந்த விகடனில் எழுதினார். அவருடைய கதைகள் ஒவ்வொன்றும் முத்திரைக்கதைகளாகப் பிரசுரிக்கப்பட்டன. அதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் 80வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜெயகாந்தனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், விகடன்பிரசுரம் அவருடைய கதைகளைப் புதுமையான  முறையில் வெளியிட்டுள்ளது. அதாவது 50 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் கதைகள் எந்த […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின்  பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]

Read more
1 53 54 55 56 57 80