வள்ளலாரின் தமிழ் மருத்துவம்

வள்ளலாரின் தமிழ் மருத்துவம், ப. இராதா, நாகா பதிப்பகம், புதுச்சேரி, பக். 98, விலை 90ரூ. முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை புத்தகமாக மாற்றியிருப்பதால் ஒரு வாசகனிடமிருந்து இந்நூல் அந்நியப்பட்டுவிடுகிறது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பேராசிரியர் குழுவுக்குப் புலப்படச் செய்வதற்கும், ஒரு வாசகனுக்கு விளங்கச் செய்வதற்கும் இந்த புத்தகத்தை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் செய்யாததால் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரையின் அச்சுப் பிரதியாக மட்டுமே உள்ளது. வள்ளலாரின் பேச்சில் பாடல்களில் இடம்பெறும் கீரைகள் மலிகைகளைக் குறிப்பிட்டு அதன் பயன்களை விளக்கிச் சொல்கிறது […]

Read more

களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும், ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 621310, விலை 300ரூ. தடய அறிவியல் அறிஞரான பேராசிரியர் ப. சந்திரசேகரன் தடயவியல் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் எழுதியுள்ள நாவல். தடயவியல் ஆய்வு போலவே அமைந்துள்ளது. வித்தியாசமான முயற்சி, வாசிக்கவும், வித்தியாசமான அனுபவம். நன்றி: இந்தியா டுடே, 7/8/2013.   —-   பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, துளசி. இராமசாமி, விழிகள், வேளச்சேரி, சென்னை 42, பக். 888, விலை 700ரூ. பழந்தமிழ் இலக்கிய நூல்களைத் […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 350ரூ. இது புதுமையான முறையில் எழுதப்பட்ட பயனுள்ள அகராதி. முன் பகுதியில் இலக்கிய நூல்களில் காணப்படும் கடினமான சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களை பிறர் உதவியின்றி தாங்களே கற்க உதவும். பின்னர் இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்களும், அதன்பின் தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி, தமிழ் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பயன்படும். தமிழறிஞர் கண்ணப்ப முதலியார் எழுதிய […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ. […]

Read more

ஒரு கொத்து அகம்

ஒரு கொத்து அகம், நீலமணி, திலகம் பதிப்பகம், 17இ, பி1, குமரன் குடியிருப்பு, கே.கே. பொன்னுரங்கம் சாலை, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை 87, பக்கங்கள் 222, விலை 110ரூ. சங்க இலக்கிய நூல்களில் புறம் போரின் வீரக்கதைகளை விவரிக்கும் என்பதும், அகம் தமிழரின் காதல் வாழ்வை கவிநயம் சொட்டச் சொட்ட விவரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் ஆதரவுடன் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர் தொகுத்த அகநானூறு நூலில் இருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு புது முயற்சியாக […]

Read more

எண்ணங்களின் அதிசய சக்தி

எண்ணங்களின் அதிசய சக்தி , ஆரிசன் ஸ்வெட் மார்டன், தமிழில்: விமலநாத், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்கம்: 314, ரூ. 160. வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும் , எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது. நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு ‘செல்’லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன […]

Read more

கர்ம வீரர் காமராசரின் வரலாறு

கர்ம வீரர் காமராசரின் வரலாறு, முகிலை எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html கவிதை வடிவில் காமராஜர் வரலாறு. கல்விக்கண் திறந்த காமராசரின் வாழ்க்கை வரலாற்றை எளிய, ஆனால் இனிய கவிதை நடையில் ஆசிரியர் ஆக்கித் தந்துள்ளார். படிப்போர் உள்ளத்தை தொட்டு உணர்வை தட்டி எழுப்பும் கருத்துக்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. நூலின் இறுதியில் பிரிவுத்துயர் என்னும் பாடல் தலைப்பிட்டு பத்துக்கும் மேற்பட்ட […]

Read more

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ. இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, […]

Read more

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100 ரூ இலக்கியம் தோய்ந்த கவிஞராகவும், அரசியல் துறை சார்ந்த நெறியாளராகவும், நல்ல வழக்கறிஞராகவும், மானடத்தை நேசிக்கும் மாண்பாளராகவும் உலா வருகின்ற கவிவேந்தர் டாக்டர். மு.வ., எனத் துவங்கி, ‘டாக்டர் மு.வ., அவர்களும் நானும்’ என 30 கட்டுரைகளோடு நிறைவு செய்துள்ளார் வேழவேந்தன். மாண்பு என, பல கட்டுரைகளில் நூலாசிரியர் அழகாய் பதிவு செய்துள்ளார். பேராசிரியரது படைப்புகளில் செந்தாமரை, கள்ளோவியமோ, அந்த நாள், கரித்துண்டு, கயமை, அகல்விளக்கு, […]

Read more

பத்தினிப் பெண்டிர் அல்லோம்

பத்தினிப் பெண்டிர் அல்லோம் (பரத்தையர் கணிகையர் தேவதாசிரியர் பற்றிய பதிவுகள்), அ. கா. அழகர்சாமி, கருத்து – பட்டறை, 2, முதல் தளம், மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 90ரூ. குடும்பப் பெண்கள் அனைவரும் தலைவனின் காலடியில் கிடக்க… தேவதாசிகள் ஆடல், பாடல், கலை வளர்த்த கதையை எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவியான கண்ணகிக்கு இணையான இடம் மாதவிக்கு இருந்தது. அவரது மகளான மணிமேகலையைப் போற்றிப் பாடவே ஒரு காப்பியம் படைக்கப்பட்டது. சுந்தரரின் மனைவியான […]

Read more
1 2 3 4