கோரா

கோரா, தாகூர், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 350ரூ. தாகூர் எழுதிய நாவல் கோரா கோரா என்னும் இந்நாவல் இரவீந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம், ஆண் பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு, பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டுக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு மகத்தான நாவல் இது. வங்க மொழியில் தாகூர் எழுதிய நாவல் மகர்ஜியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த மொழிபெயர்ப்பிலிருந்த தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார் […]

Read more

நீங்களும் வாகை சூடலாம்

நீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு […]

Read more

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு, சமந்த் சுப்பிரமணியன், தமிழில் கே. ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 160ரூ. ஒரு இனப்போரின் நிஜக்கதை ஒரு பத்திரிகையாளரான சமந்த் சுப்பிரமணியனின் பயணக் கட்டுரையாக விரிவடையும் இந்த நூல், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த முடிந்த ஒரு இனப்போரின் நிஜக் கதைகளை சொல்கிறது. போருக்கு பிந்தைய தமிழர்களின் வாழ்க்கை, ராணுவ நெருக்கடிகளில் கதைகள் துவங்கி, போரின் துவக்க காலங்களையும் கூறுகிறது. போரால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர், ராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றிய தமிழர், விடுதலை புலிகள், புலி […]

Read more

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு, டாக்டர் அ. கலாநிதி, வெற்றி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.கலாநிதி, தமது நியூசிலாந்து சுற்றுப்பயண அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகம் இது. நியூசிலாந்து நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களையும், அந்த நாட்டின் சிறப்புகளையும் நூலாசிரியர் சிறப்பாக வர்ணித்து இருப்பதால், நாமும் அங்கு இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், புத்தகத்தின் சிறப்பு மேலும் உயருகிறது. நியூசிலாந்துக்கு செல்ல இருப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. செல்ல இயலாதவர்களுக்க […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், பக். 176, விலை 95ரூ. 25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை எளிய தமிழில் எடுத்துக்கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு. எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்மான […]

Read more

பனி

பனி, ஓரான் பாமுக், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 575, விலை 450ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-182-0.html இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் படைப்புகளில் அரசியலை வெளிப்படையாகப் பேசும் தனித்துவமான நாவல் பனி. துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸுக்கு ஒரு பனிக்காலத்தில் வந்து சேரும் பத்திரிகையாளன் காவின் அனுபவங்களே இதன் கதை. துருக்கியை மேற்கு நோக்கி நகர்த்த முனையும் மதச்சார்பற்ற நவஅடாதுர்க்கிய அரசுக்கும் மத அடையாளங்களைத் தமது சுயகௌரவத்தின் சின்னங்களாகப் பார்க்கும் பெண்களுக்கும் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் […]

Read more

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா, பிரெஞ்சு மொழியில் பிரயர் லோட்டி, தமிழில் சி.எஸ். வெங்கடேசன், சந்தியா பதிப்பகம். மதுரை மீனாட்சி அம்மனின் நகைகள் எத்தனை பிரான்சு நாட்டைச் சேர்ந்த, பிரயர் லோட்டி என்ற யாத்திரீகர், பிரஞ்சு மொழியில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆங்கிலேயர் இல்லாத இந்தியா என்ற பயண நூலை சமீபத்தில் படித்தேன். சி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ள இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த 1899ல் இலங்கை அனுராதபுரத்தில் துவங்கி, காசி வரை பயணம் செய்து, இந்த பயண நூலை, லோட்டி எழுதியுள்ளார். இந்தியா தொடர்பாக, […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more
1 3 4 5 6 7