ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் யூமா வாசுகி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 380ரூ. இந்திய மொழியில் எழுதப்பட்ட முதலாவது பயணநூல் என்று சொல்லப்படுகிறது ரோமாபுரி யாத்திரை. மலையாளத்தில் எழுதப்பட்டதை 18ம் நூற்றாண்டின் நிழலில் நின்று இன்றைய நவீனத்தின் எல்லையைத் தொட்டு, தன் கவித்துவத் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் யூமா வாசுகி. கிறிஸ்தவ தேவாலயங்கள், நிறுவனங்களுக்குள் இருக்கக்கூடிய அதிகாரப்பூசல்தான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். மலங்கரைப் பிரதேசத்துக்குப் பாதிரியாராக தங்களது இனத்தைச் சேர்ந்த ஒருவரே வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் 1778ல் ஒரு குழு […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், தொகுப்பு-தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக்குழு, பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் பிறந்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய படைப்புகளின் அரிய தொகுப்பு ஒன்றை வெளியிட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அடிகளார் ஒன்றே உலகம் என்னுந் தலைப்பில் தாம் பயணம்போய் வந்த 21 நாடுகளைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். பொழுதுபோக்காக ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட ஆவணப்பதிவாக […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, பக். 110, விலை 70ரூ. தமிழகத்தின், ஏழாவது அதிசயம் என்று, கானாடுகாத்தான் ஊரில் உள்ள செட்டிநாட்டு ராஜா அரண்மனையை படங்களுடன் அதிசயிக்கும் நூலாசிரியர், சொக்கலிங்கம் புதூர், ஆத்தங்குடி, காரைக்குடி, குன்றக்குடி முதலிய ஊர்களின் வாயிலாக செட்டிநாட்டின் முழுச் சிறப்பையும் சுருக்கமாய்த் தந்துள்ளார். பல வாழ்வியல் நூல்களை எழுதி, இன்று முழுமையுடன் வாழ்ந்து வரும், நூலாசிரியரின் இப்பயண நூல் நகரத்தார் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 20/4/2014.   […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 200, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மனஉளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செல்படக்கூடியவன். அவனுடைய நண்பன் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணைய தளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப்பாடுபடுகிறார்கள். மக்கள் எழுச்சியின் மூலம் […]

Read more

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு […]

Read more

நேபாளில் புனிதப் பயணம்

நேபாளில் புனிதப் பயணம், இமாலயா பதிப்பகம், 285, 1/34பி, முதல் தளம், எமரால்டு வணிக வளாகம், திருச்சி முதன்மைச் சாலை, தஞ்சை 7, விலை 60ரூ. இமயமலைச் சாரலில் உள்ள நேபாளத்தில் எவரஸ்ட் சிகரம் உள்பட பல சிகரங்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், உலகப் புகழ் பெற்ற கோவில்களும் உள்ளன. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மருத்துவர் நா. மோகன்தாஸ், தன் அனுபவங்களை விவரித்து இந்த நூலை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையான பயனுள்ள புத்தகம்.   —-   டாண்கியோட்டே, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10-2, […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர். குப்புஸ்வாமி, 8, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 552, விலை 350ரூ. மஹாபாரதத்தை இதற்கு முன் படித்தவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் இந்நூலைப் படிப்பவர்கள் பெறும் அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு எளிமையான சுவையான நாவலைப் படிப்பது போலத்தான் உள்ளது. அதே சமயம் இதில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவுச் செரிவான ஒரு பெட்டகத்தை திறந்து பார்த்த உணர்வும் எழுதுகிறது. மகாபாரதத்தைப் பற்றி நூல் எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமன்று. தமிழ் […]

Read more

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 560, விலை 300ரூ. பகவத் கீதையை ஏதோ மதம் சார்ந்த ஒரு கோட்பாடு அல்லது கொள்கை என்று பார்க்கக்கூடாது. அது மனித வாழ்வின் அகச் செயல்பாடுகளை அலசி ஆராய்வதாகும். உளவியலின் ஊற்றுக்கண் பகவத்கீதை என்பதே சரி. அந்த உளவியல் கோட்பாடுகளை விளக்கி அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த உரையின் நோக்கம். உளவியல் கோட்பாடுகளை அவற்றிலிருந்து தனியே பிரித்து எடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு […]

Read more

திருக்குறள் நயவுரை

திருக்குறள் நயவுரை, திருக்குறள் பெட்டகம், தங்க பழமலை, அருள்மொழி வெளியீடு, திருக்கோவிலூர் 605 757, பக். 88, விலை 30ரூ. திருக்குறள் நயவுரை என்ற முதல் நூலில் குறட்பாவுக்கு உரை காணும்பொழுது, அவ்வுரைக்கு அரண் சேர்க்கும் வண்ணம் திருக்குறளுக்குள்ளேயே அமைந்துள்ள வேறு குறட்பாக்களைக் கருத்திற்கொள்வதும், நாம் கொள்ளும் உரையை உறுதிப்படுத்தும் வண்ணம் பிற புலவர் பெதுமக்களும், அருளாளர்களும் கூறிப்போந்துள்ள கருத்துகளை உளங்கொள்வதும் சிறப்பமைந்த உரைக்கு வழிகோலும் என்பதை மனதில் இறுத்தியே இவ்வுரையினை யான் எழுதியுள்ளேன் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பு உள்ளது. அடுத்து திருக்குறள் […]

Read more
1 4 5 6 7