விழித்திரு விடியல் விருது கொடுக்கும்

விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more

மருதகாசி திரையிசைப் பாடல்கள்

மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன், பசுபதி தனராஜ், தாய்த் தமிழ் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-189-0.html மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும் 10 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மகன், தலைமைச் செயலர், கவர்னர் என உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த […]

Read more

சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ. ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ […]

Read more

காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ. நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை […]

Read more

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை,  மதுரை 6, விலை 380ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-2.html பாப்லோ நெரூடாவின் பெயர் தமிழ் வாசகருக்கு நன்கு பரிச்சயமானது. அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளன. நெரூடா, பாரதிக்கு நிகரான மகாகவி. இடதுசாரிகளின் வெற்றியைப் பாரதி யுகப் புரட்சி என வருணித்துள்ளான். நெரூடா அந்த இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். நெரூடாவின் அரசியல் நிலைப்பாட்டால் அவர் வாழ்க்கை எப்போதும் நெருக்கடியிலேயே இருந்துள்ளது. இம்மாதிரியான தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் […]

Read more
1 679 680 681 682 683 841