முள்வாங்கி

முள்வாங்கி, சொற்கோ கருணாநிதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-259-9.html புதுக்கவிதைகளின் ராஜ்ஜியத்திலும் மரபுக் கவிதைகளை ராஜ நடைபோட வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் கவிதைகளின் தொகுப்பு இது. புதுக்கவிதைகளுக்கான வீச்சை மரபுக் கவிதைக்குள்ளும் கொணர கவிஞர் எடுத்திருக்கும் முயற்சி புதுமை இதயமும் நுரையீரல், சிறுநீரக பாகங்கள் யாவுமே, கருவியாய்க் கிடைக்கட்டும் என்பதில் உள்ள நவீன அறிவியல் கருத்தாக்கம் கவிதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கின்றது. […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின்  பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]

Read more

1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more

குப்பை உலகம்

குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ. சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருப்பூர் சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் நூலின் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சாயப்பட்டறைகளாலும், மின் குப்பைகளாலும் நெகிழி குப்பைகளாலும், நியூட்ரினோ ஆய்வுகளினாலும் இந்த உலகம் எவ்வளவு குப்பைக்காடாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதை அதன் தீவிரம் குறையாமல் எச்சரிக்கும் கட்டுரைகள் அதிகம். மனிதனின் நாகரீக வளர்ச்சி இயற்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக வாதாடுகிறது இந்நூல். -இரா. மணிகண்டன். […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ. வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பிரேஞ்சு நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்தவர் மாவீரன் நெப்போலியன். பல போர்களில் வெற்றி பெற்ற நெப்போலியன், ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மேலும், நெப்போலியனின் காதல் குறித்தும், அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சீர்ததிருத்தங்கள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.   —-   வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more

நேர் நேர் தேமா

நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 (7/3)ஈ1 பிளாக், முதல் தளம், மேட்லிசாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-9.html அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன் என்ற சாலமன் பாப்பையா தொடங்கி பத்மா சுப்ரமணியம், எம்.என். நம்பியார், கே. பாலச்சந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ். விஸ்வநாதன், நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேட்டி […]

Read more

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள்

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள் (நூலாசிரியர்: கே.சாய்க்குமார், வெளியீடு: 16, 28, 2 வது மெயின் ரோடு , சாய் நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106., பக்கம்: 160, விலை: ரூ.90.) பிறமாநிலங்களில் உள்ள, 200 விநாயகர் தலங்களின் பூரண வழிகாட்டி நூல். பிணைப்பில் வரைப்படம் – அகர வரிசையில் தல விவரம் உள்ளது. திருகோவிலின் பூஜை நேரம் வழிதடம்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என, நலல பயனுள்ள செய்திகள் உள்ளடக்கிய பயண நூல். நன்றி: தினமலர் (10-3-2013). — […]

Read more
1 2 3 4