புகை நடுவில்

புகை நடுவில், கிருத்திகா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 254, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-0.html மனித உறவுகளை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விவரிக்கும் நாவல்தான் புகை நடுவில். இந்த நாவல் கோர்வையாக, சம்பவங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், விவரங்களின் தோரணமாக அமைந்துள்ளது. நடுத்தர வர்கக்த்தின் குறிப்பாக அந்த வர்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை பிரதிபலித்துள்ளது.‘ ஆண், பெண் உறவு குறித்து பல்வேறு தளங்களில் நாவல் அலசுகிறது. அது சில இடங்களில் தனிமதவாதமாகவும், […]

Read more

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதிநகர், வியாசர்பாடி, சென்னை 39, பக். 385, விலை 170ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-2.html ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புப் படுகொலைகளை பட்டியலிடுவதோடு, அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, ஈழத்துயர் குறித்து தமிழகத்தில் நடந்தேறிய அரசியல் நாடகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். தமிழ், தமிழர் உரிமைகள், பண்பாடு, கல்வி, சாதிவெறி, இனஅழிப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, […]

Read more

அறியப்படாததமிழகம்

அறியப்படாததமிழகம், தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.கே,பி, சாலை, நாகர்கோவில் 629001, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-049-2.html தமிழ்நாட்டில் திருமணத்தில் இருந்து கோவில் விழாக்கள் வரை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அதுபற்றி ஆராய்ந்து, பல சுவையான தகவல்களைக் கொடுத்துள்ளார், பேராசிரியர் தொ. பரமசிவன். தென்னை மரம் பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் எவ்வித குறிப்பும் இல்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுந்த எந்த பக்தி இலக்கியத்திலும், கோவில்களில் தேங்காய் உடைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. தமிழர் திருமணத்தில் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு சென்று நூற்றாண்டின் முன்பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரூ நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை தேவதாசியும் மகானும் என்ற தலைப்பில் வி.ஸ்ரீராம் ஆங்கிலத்தில் வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில்நாடன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்ற பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, அரிசியில் எத்தனை வகைகள், பழங்காலத்தில் நம்மிடம் வழக்கத்தில் […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்), விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 629001, பக். 600, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ். பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனிமனித […]

Read more

பட்டு

பட்டு, அலெசான்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்.120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html தமிழில் இத்தாலி நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீதுகொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் […]

Read more

சின்ன அரயத்தி

சின்ன அரயத்தி, மலையாள மூலம்-நாராயணன், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 280, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-7.html ஆசிரியரின் (மலையாள மூலம்) முதல் படைப்பான இந்த நாவல் சாகித்ய அகடமி, கேரள சாகித்ய அகடாமி, தோப்பில் ரவிவிருது, அபுதாபி தி விருது என்று ஏகப்பட்ட விருதுகளை பெற்ற ஒன்று. கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களை குறித்து ஆதிவாசி ஒருவரே எழுதிய நாவல். இடுக்கி மாவட்ட பழங்குடியினரின் பண்பாடு, […]

Read more

சுவடிகள் வழங்கி கவிதைகள்

சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ. பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் […]

Read more
1 8 9 10 11 12