எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more

சுவடிகள் வழங்கி கவிதைகள்

சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ. பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் […]

Read more

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை, மு. இராமசுவாமி, செப்பிபடைப்பகம், 20, இருளாண்டிக் காலனி, விராட்டி பத்து, மதுரை 10, பக்க.448, விலை 400ரூ. தமிழித் திரைப்படப் பயணத்தில் இது ஒரு புதிய பாதை. நூலாசிரியர் மு. இராமசுவாமி, 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் போக்கை, வளர்ச்சியை, மாற்றத்தை, அதன் வீழ்ச்சியை, உயர்வை அவரது பார்வையில் பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் ஒரு தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவைப் பற்றிய அதன் ஊடாக […]

Read more

சிலப்பதிகார ஆராய்ச்சி

சிலப்பதிகார ஆராய்ச்சி,  பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-3.html சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? […]

Read more

துரோகத்தின் நிழல்

துரோகத்தின் நிழல், அ. வெண்ணிலா, வெளியீடு: அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக்: 104, விலை: ரூ. 60. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-2.html ஆண் – பெண் உலகத்தில் பெண் என்பதாலேயே அவளது உடல் அடையும் அலைக்கழிப்புகள், மனம் அடையும் சோர்வு, தனிமை கொடுமை, குழப்பங்களும் பதற்றங்களும் தரும் நிம்மதியின்மை ஆகியவற்றை கவிதை மொழி வழி அலங்காரமின்றி வெளிப்படுத்துகிறார் வெண்ணிலா. பெண்ணுடல் நிகழ்த்தும் அற்புதங்களை அல்லது அறிவாற்றலை வெறும் பெண் அளவில் நிறுத்தி விடாமல், […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்பி. சொக்கலிங்கம், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை – 17, பக்கம்: 200, விலை: ரூ.140. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகையான வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வரும். அவற்றில் சில மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்த்து, பிரபலமாகின்றன. அப்படி பிரபலமான வழக்குகள் சிலவற்றின் தொகுப்பே இந்நூல். ஆஷ்துரை கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலைவழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை […]

Read more

சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?

சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?, சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 28, பக்கம்: 196, விலை : ரூ.20. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட குட்டி குட்டி கதைகளைக் கொண்ட நூல் இது. மற்ற குழந்தைகள் கதைகள், நீதக் கதைகளில் இருந்து இது வேறுபட்டதாக உள்ளது. குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளைத் தாங்களே, சிறுசிறு முயற்சிகள் செய்து பார்த்து, புத்திசாலிதனமாக தீர்த்துக் கொள்வது எப்படி என்று கற்றுத்தரும் நூல். அப்படிச் செய்வதன் மூலம், குழந்தைகள் மற்றவர்களுக்கும், சுற்றியுள்ள இயற்கை, […]

Read more

பயங்கரவாதம்

பயங்கரவாதம், பி. ராமன், தமிழில்-ஜே.கே. ராஜசேகரன்கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை 17, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html இன்றைய பயங்கரவாதம் நேற்றைய பயங்கரவாதத்தை விட வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் என்கிறார், புத்தக ஆசிரியர் பி. ராமன். ஆங்கிலத்தில் வந்த இப்புத்தகத்தை பயங்கரவாதம் நேற்று இன்று நாளை என்ற பெயரில் ஜே.கே. ராஜசேகரன் மொழிபெயர்த்து இருக்கிறார். எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள், […]

Read more

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more

நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more
1 53 54 55 56 57