குமுதம் சக்ஸஸ்

குமுதம் சக்ஸஸ், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 25ரூ. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. அடுத்து என்ன கோர்ஸ் படிப்பது? எந்த கல்லூரியில் சேர்வது? என்ற குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும். கூடவே, நமக்கெல்லாம் அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே கிடைத்தாலும் வங்கிகளில் கல்விக் கடன் கிடைக்குமா? இப்படிப் பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழலாம். அவற்றிற்கெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களைக் கொண்டே எளிமையாக பதில்களைக் கொடுத்திருப்பதுதான் குமுதம் சக்ஸஸ் நூலின் […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வே. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 48, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டு விட்டார்கள். இனி தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதில் பிரச்னை இருக்காது என்றே அத்தனை கோடி தமிழர்களும் நம்பியிருந்தனர். ஆனால் கடிகாரம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்குக் கிடையாது என்கிற நிலையில், ஒரு நதி பாயும் அத்தனை நிலப்பரப்புக்கும் […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more

ஹைகூ வானம்

ஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ. அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 416,விலை 200ரூ. ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 65 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள் பற்றி தமிழன், தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து, மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 6/1/13.   —-   காலத்தின் குரல் தி.க.சி., வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, […]

Read more

வேட்டைக்கத்தி

வேட்டைக்கத்தி, ஹாருகி முரகாமி, தமிழில்-ச.ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் வேட்டைக் கத்தி இருபதாவது பிறந்தநாளில் அவள், அமெரிக்க எழுத்தாளர் மெய்லி மெலாயின் பதிலித் திருமணம், இங்கிலாந்து அறிவியல் புனைகதை எழுத்தாளர் மோனிகா ஹ்யூக்ஸின் வணக்கம் நிலவே, போய் வருகிறேன் ஆகிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்நூல். முரகாமியின் கதைகளில் பாத்திரங்களைப் புதிரான மையமாக்கி நுட்பமான விஷயங்களை […]

Read more

ஐந்தாம் கட்ட விடுதலை போர்

ஐந்தாம் கட்ட விடுதலைப் போர், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசார்பாடி, சென்னை 39, பக். 534, விலை 225ரூ. தமிழீழம் தேவையா? தேவையில்லையா? என்று பேசும் பலரும், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்னைகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அத்தகையோரை கடுமையாக சாடுவதோடு, அது நம் சகோதரர்களின் பிரச்னை என்ற உறுதியோடு நூல் முழுவதும் பேசுகிறார் கண்மணி, கடந்த 10ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த வரலாற்று நிகழ்வுகளை நூல் முழுதும் பதிவு செய்கிறார். பேச்சுவார்த்தை […]

Read more

காலமறிந்து கூவிய சேவல்

காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.   —-   மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ. நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் […]

Read more

அத்தையின் அருள்

அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ. அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை […]

Read more
1 52 53 54 55 56 57