உலகும் தமிழும்

உலகும் தமிழும், சவிதா பிரசுரம், தஞ்சாவூர், விலை 150ரூ. தமிழ் மொழி, தமிழின் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழர் பண்பாடு ஆகியவை பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூல். மற்ற மொழிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், கல்வெட்டுச் சான்றுகளோடும் நிறுவியுள்ளதோடு, இன்றைய தமிழின் நிலையையும், தமிழ் மொழி மேம்படச் செய்ய வேண்டிய பணிகளையும் நூலாசிரியர் சி. பவுன்ராஜ் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/8/2014.   —- இன்னொரு கிரகத்திற்கு, வடிவம் பதிப்பகம், திருச்சி, விலை 300ரூ. அமெரிக்காவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், தொகுப்பாசிரியர் என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், சென்னை, 2, பக். 368, விலை 350ரூ. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக இலக்கியத்தில் எழுந்த முதல் குரல் ஜெயகாந்தனுடையது. வணிகப் பத்திரிகைகளும் நல்ல படைப்பும் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். அவர் ஆனந்த விகடன் இதழில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய சிறுகதை, குறுநாவல், முழுநாவல் என கலந்து 17 கதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். வெளிவந்த காலத்தில் வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரளயம், […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ. துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் […]

Read more

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன், மூலம் தமிழாக்கம் விரிவுரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, பக். 1227, விலை 350ரூ. 1400 ஆண்டுகளுக்கு முன் மனித சமூதாயம் அனைத்திற்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், எதிரிகள் பலமுறை முயன்றும் இதற்குள் ஒரு மனித வார்த்தையைக்கூட திணிக்க முடியாமல், இன்று வரையும் அதன் புனிதம் பாதுகாக்கப்படுவதுதான். திருக்குர்ஆன், உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே அதன் மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. அத்தகைய திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் […]

Read more

மஹாபாரதம்

மஹாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ. எல்லோருக்குமான பாரதக் கதை இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும். ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் அனைவருள்ளும் எழும். இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மஹாபாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. […]

Read more

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. தமிழ்ச் சமூகம் எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. சங்க காலத் தமிழர்களுக்கும், இன்றைய தமிழர்களுக்கும் நடை, உடை, பாவனை அனைத்திலும் எத்தனையோ மாறுதல்கள். இதுகுறித்து நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. அதாவது சங்க காலக் கல்வி முறை, தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல், தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் இலக்கணம், கண்ணதாசன் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்பட 142 தலைப்புகளில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும், டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், வி.சி.எஸ். சிராமன், சேலம், விலை 300ரூ. குழந்தைகள் அனைவருமே நிறைய மதிப்பெண்கள் வாங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அனைவரது எண்ணங்களும் ஈடேறுவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 10 பேராவது படிக்கத் திணறுகிறார்கள். அப்படி படிப்பில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, அக்கறையெடுத்து, படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும் என்ற இந்த நூலை மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார் பிரபல மனநல மற்றும் குழந்தைகள் மருத்துவரான டாக்டர் எஸ்.எம். பகதூர் மொய்தீன். படிப்பில் குறைபாடுள்ள […]

Read more

கங்கை கொண்ட சோழன்

கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், நான்கு பாகங்கள் சேர்த்து  விலை 1630ரூ. மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மாமன்னராக விளங்கிய ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் மிக சுவாரசியமாக எழுதப் பெற்ற நாவல். சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வுக்கட்டுரை அல்ல. அது ஓர் உணர்வுப் பெருக்கு என்று கூறும் இந்த நாவலின் ஆசிரியர் பாலகுமாரன், தனது உணர்வுகளைத் திரட்டி, இந்த சிரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார். கப்பல்கள் கட்டும் திறன், கடற்பயணம், போர்க்களம் போன்றவற்றின் நுணுக்கங்களை உள்வாங்கி, […]

Read more

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள்

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள், திரு.வி.க. நிலையம் பதிப்பகம், வேலூர், விலை 250ரூ. தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் வல்லவர், பேரறிஞர் அண்ணா. அவர் ஹோம் லேண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழ் நடத்தினார். அதில் 1957 முதல் 1961 வரை அவர் எழுதிய கட்டுரைகள் The Dawn (விடியல்) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, புத்தகமாகக் கொண்டு வந்துள்ளவர் வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜி.வேதாச்சலம். திராவிட நாடு பத்திரிகையில், தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. அதுபோன்ற கடிதங்கள் இந்த […]

Read more
1 155 156 157 158 159 223