கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more

திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ. சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை, வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391, ஏ, ராம்தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை ஒரு பாகம் 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-306-8.html குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது, நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தை மையமாக வைத்து காவல் புலன்விசாரணை அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் 1034 பக்கங்களுடன் 25 தலைப்பகளில் 2 பாகம் கொண்ட நூலை வீ. சித்தண்ணன் எழுதி உள்ளார். இவர் 35 ஆண்டுகள் காவல் துறையில் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி. மகாதேவா, மித்ரா ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது. […]

Read more

உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள்

உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள், சாகம்பரிதாசன், எம்.ஏ. ஜெய் ஷங்கர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, அய்யர்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. சிறுகதைகள் எப்போதுமே ரசமானவை. படிக்க சுவாரசியமானவை. அதிலும் உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை படிக்கும்போது அதன் சிறப்பு இன்னமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நூலில் உலகப் புகழ்பெற்ற 8 சிறுகதைகளை தொகுத்து தந்திருக்கிறார்கள். பணக்கார தோழியின் நெக்லசை இரவல் வாங்கி தொலைத்துவிட்டு அதனால் அவதிப்பட்ட நடுத்தர வர்க்க பெண்ணின் போராட்டத்தை சொல்லும் நெக்லஸ் ஓ நெக்லஸ் தொடங்கி அத்தனை கதைகளிலும் ஆச்சரியம் […]

Read more

சாகச வீரர் சச்சின்

சாகச வீரர் சச்சின், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 100ரூ. இந்திய கிரிக்கெட் வீரர்களின் இன்று உலகப்புகழ் பெற்ற சாதனையாளராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் குன்றில்குமார். கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிராட்மேன். அவர் மனதைக் கவர்ந்தவர் டெண்டுல்கர்தான். தன்னுடைய 90வது வயது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டெண்டுல்கரை அழைத்துப் பெருமைப்படுத்தினார் பிராட்மேன். சாதனை வீரர் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் […]

Read more

அமானுஷ்யம்… ஆனால் உண்மை

அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ. ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட துமிழர்கள், அங்கு அடைந்த துயரங்கள், இழப்புகளை வாய்மொழி பாடல்களாக பாடியுள்ளனர். பல்வேறு சான்றோர்களால் சிலவற்றை பெ.முத்துலிங்கம் தொகுத்துள்ளார். இந்த பாடல்கள் மூலம், தமிழர்கள் இலங்கையில் கால் வைத்த நாள் முதலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்ட விதம் விளங்குகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் […]

Read more
1 204 205 206 207 208 223