சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1919இல் பிறந்தவர் எச். வேங்கடராமன். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர ஆதீன நிலையத்தில் தினமும் மாலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை இலவசமாகக் கற்பித்து வந்தார். மேலும் […]

Read more

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு, இதழ்கள், சோ. ராஜலட்சுமி, காவ்யா, சென்னை, பக். 280, விலை 250ரூ. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், புலமை, மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல். தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள உறவு, தமிழின் வரி வடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் இந்நூல் பயணிக்கிறது. திராவிட […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை. காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் […]

Read more

பாமரன் பார்வையில் கம்பர்

பாமரன் பார்வையில் கம்பர், அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 268, விலை 110ரூ. பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை. காக்கா பிடிக்கலாமா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா?, அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே, பெண்டாட்டி ஊருக்குப் […]

Read more

முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், பரத்வாஜர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 296, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்தர் புராணம் ஆகிய மூன்று பெரும் கடவுளர்களின் புராணங்களை ஒரே நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். இதில் முதல் பகுதியாக வரும் சிவபுராணமானது, சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புராணச் சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இரண்டாவது பகுதியான விநாயர் புராணத்தில் புராணக் கதைகளைவிட விநாயகர் வழிபாடு குறித்த விளக்கங்களே மிகுதியாக உள்ளன. […]

Read more

கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

தஞ்சைப் பெரிய கோயில்

தஞ்சைப் பெரிய கோயில், வி.அ. இளவழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிந்ததே. சைவ சமய இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட சிவ தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை, தான் மொழி பெயர்த்த திருவாசக நூலின் முன்னுரையில் ஜி.யு.போப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு நம் கோயில்களின் அருமை பெருமைகள் தெரிந்துள்ள அளவு தமிழ்நாட்டவர்க்குத் தெரியவில்லை என்பது கவலைக்குரியது. […]

Read more

தமிழன் குரல்

தமிழன் குரல், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 60ரூ. தமிழர்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் ம.பொ.சிவஞானம் அக்கறையுடன் எழுதியிருக்கும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர்களின் சமயக் கொள்கை, தேசியக் கொள்கை, தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசுவோரின் பழக்க வழக்கங்கள், சித்தூர் ஜில்லாவின் வரலாறு, சித்தூர் முதல் திருப்பதி வரை பெரும்பாலோர் தெலுங்கு பேசுவோராயிருப்பதற்கான காரணம், முத்தமிழ் வளர்த்த கோயில்கள் மூடத்தனத்தை வளர்க்கும் கூடங்களாக மாறிப்போனது. தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தாத தமிழ் நாடகங்கள் இப்படி எல்லாத் துறைகளையும் பற்றி தெளிவாகவும் […]

Read more

1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ. தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால […]

Read more
1 142 143 144 145 146 180