காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட வியத்தகு அனுபவங்கள் வழியே தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய எண்ணப் பதிவுகளாக புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இக்கால இளைஞர்களும், அக்கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கின்றன. 1940களில் சங்கீத […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி), சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 400, விலை 225ரூ. இந்தியாவில் முகலாய அரசு உருவாகி வலிமை பெற்றது. பாபரின் ஆட்சி முதல் அவுரங்கசீப் ஆட்சி வரையிலான காலம் ஆகும். இக்காலத்தில் முகலாய மன்னர்கள் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, கட்டடக் கலை, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றில் ஏற்படுத்திய பல்வேறு மாறுதல்களை இந்நூல் விரிவாகச் சொல்கிறது. அதைப்போல அவுரங்கசீப் காலத்துக்குப் பிந்தைய முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. முகலாய மன்னர்களின் […]

Read more

நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை 17, பக். 200, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நாட்டின் பிரதமராக கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடியின் நம்பகத்தன்மை குறித்து பாஜகவின் எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், மோடியின் நற்குணங்களையும், நல்லாட்சித் திறனையும் விளக்கும் நோக்கில் இந்த நூலை ஆசிரியர் படைத்துள்ளார். அரசியல் வித்தகராகவும், பேச்சாளராகவும் அறியப்பட்ட மோடி, கவிஞர், எழுத்தாளர் (அதிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாந்தினி குஜராத்தி பத்திரிக்கைக்கு அதிக […]

Read more

தமிழக ஊரும் பெயரும்

தமிழக ஊரும் பெயரும், தா.குருசாமி தேசிகர், தருமபுர ஆதீனம், குருஞான சம்பத் மடம், பக். 130, விலை 60ரூ. மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டைப் பொருத்தவரை எந்த ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டாலும் அப்பெயரோடு ஒரு வரலாறு இணைந்தே இருக்கும். ஆனால், காலப்போக்கில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களின் பெயர்கள் மக்களின் பேச்சு வழக்கில் மாறுபாடடைந்து அவற்றின் உண்மையான பொருளை இழந்து விட்டிருக்கின்றன. இந்நூலில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைப் பல கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஆசிரியரின் பெரும்பாலான முடிவுகள் […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 176,விலை 95ரூ. இந்நூலாசிரியர் இயகோகோ சுப்பிரமணியம், கோவையில் பிரபலமான தொழிலதிபர். கோவையிலிருந்து வெளிவரும் நமது நம்பிக்கை மாத இதழில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் கிடையாது. மேற்கத்திய நிர்வாக முறையும் உயர்கல்வியும் மட்டுமே தொழில்துறை வளர்ச்சிக்குப் போதுமானதல்ல. நமது பண்பாட்டின் அடிப்படையில் தனித்துவடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நிரந்தரமாக்க முடியும் என்பன போன்ற கருத்துகளைத் தனது அனுபவங்களூடாக விளக்குகிறார். உயர் குணங்களே வெற்றியை அருகில் […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக். 512, விலை 217ரூ. நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர். வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. தமிழகத்தின் பழம்பெரும் நாடகக் கம்பெனியான எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜில் பணியாற்றியவர் கலைமாமணி பி.ஆர். துரை. அவர் இந்த நூலில், தனது நாடக உலக அனுபவங்களை சுவை குன்றாமல் தொகுத்து அளித்துள்ளார். 18 தலைப்புகளில் இவரின் அறுபது ஆண்டு கால கலை உலக வாழ்க்கை அனுபவங்கள், பழம் பெரும் நாடக, திரையுலக நடிகர்களின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே தாங்கியுள்ளது. 1957 முதல் 61 வரை பாய்ஸ் […]

Read more

ரேஷன் கார்டு கையேடு

ரேஷன் கார்டு கையேடு, ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு. இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற […]

Read more

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு, இதழ்கள், சோ. ராஜலட்சுமி, காவ்யா, சென்னை, பக். 280, விலை 250ரூ. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், புலமை, மொழியியல் ஆகிய ஐந்து இதழ்களில் மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல். தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிற மொழிக்கும் உள்ள உறவு, தமிழின் வரிவடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் […]

Read more

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், மீண்டும் பாடம் கேட்கிறேன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந. முத்துமோகனின் நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 196, விலை 160ரூ. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனை ஓர் ஆய்வாளர் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர் – தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும், புலமையும் உடையவர் – மனித உரிமை சார்ந்த பல்வேறு இயக்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் ஆகியவற்றில் தொடர்புடையவர் என்று மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மனித வாழ்வு சார்ந்த […]

Read more
1 141 142 143 144 145 180