பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ. இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற […]

Read more

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ. உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் […]

Read more

இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், சென்னை 28, பக். 152, விலை 100ரூ. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால், அயல் பணிகளை ஏற்றுச் செய்த இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பால் அங்கு பணியிலிருந்தவர்கள் அதன் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் நிலைக்குலைந்து போன சிலர் தற்கொலை வரை போனதுமான சோகம் இவையே இந்நாவலின் களம். ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுவது எளிது. நீக்கப்படுவது அதனினும் எளிது. அப்படி நீக்கப்பட்டவர்கள் தங்கள் தகுதிக்கும் ஊதியத்துக்கும் ஏற்ற அடுத்த வேலையைத் […]

Read more

உனக்குள்ளே ஒரு குரல்

உனக்குள்ளே ஒரு குரல், டாக்டர் ராஜன் சங்கரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 145ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-865-8.html உன்னை நீ அறிவாய் உன்னை நீ குணப்படுத்திக் கொள்வாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு அத்தகைய கருத்துகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூலின் நோக்கம். இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மற்ற சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டிருப்பதை விளக்குகிறது இந்த நூல். அரிப்பு, […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் […]

Read more

பொது அறிவு பொக்கிஷங்கள்

பொது அறிவு பொக்கிஷங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 17, விலை 40ரூ. மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய 3 பொது அறிவு நூல்களை விஜயவர்மன் எழுத நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு மாணவர்களுக்கான பொது அறிவு பொக்கிஷம், எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் என்ற தலைப்புகளில் இப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பயனுள்ள புத்தகங்கள். —-   நிகரில்லா தலைவன் சேகுவேரா, மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை […]

Read more

தமிழ் வளர்த்த தமிழர்கள்

தமிழ் வளர்த்த தமிழர்கள், தா. ஸ்ரீனிவாசன், மகா பதிப்பகம், 3, சாய் பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, பக்கங்கள் 144, விலை 60ரூ. தமிழ்த்தாத்தா உ.வே.சா. தொடங்கி பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி, டாக்டர் மு.வ., என பத்து சிறந்த தமிழ்த்தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப் பாராட்டப்பட வேண்டும். நல்லறிஞர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம். – ஜனகன். தமிழில் திணைக் கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், நியூ […]

Read more

கங்கை கரையினிலே

கங்கை கரையினிலே, ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600 014, பக்கம் 205, விலை 150 ரூ. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ப. முத்துக்குமாரசாமி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவளி, தமிழை முறையாகப் படித்த ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை நல்ல தமிழில் வழங்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர். நூலாசிரியர் சென்ற ஆண்டு சதுர்தாம் தரிசனம் என்று அழைக்கப்படுகின்ற யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு புனிதயாத்திரை செய்துவிட்டு, நம்மையெல்லாம் இந்த நூலின் வாயிலாக அத்துணை புண்ணிய தலங்களுக்கும் அழைத்தும் செல்லுகிறார். […]

Read more