மக்கள் தோழர் ஜோதிபாசு

மக்கள் தோழர் ஜோதிபாசு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றோடு கலந்து விட்ட மகத்தான தலைவர் ஜோதி பாசு. இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு மிகப்பெரும் கவுரவத்தை ஏற்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராக திகழ்ந்த ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. லண்டனில் சட்டம் பயின்ற ஜோதி பாசு வக்கீல் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணிக்காக  களத்தில் குதித்தார். சட்டமன்ற உறுப்பினராகி துணை முதல்வரானார். பின் முதல்வரானார். 23 ஆண்டுகள் மாநில […]

Read more

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ. திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தாய்

தாய், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. புகழ் பெற்ற ரஷிய நாவலான தாய் உரைக்கின்ற கருத்தாலும், உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்புகளாலும், உணர்வுள்ள நடையாலும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இதை எழுதிய மார்க்சிம் கார்க்கி, அழியாப் புகழ் பெற்றுவிட்டார். 127 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனையான புத்தகம் இது. குடிகாரக் கணவனிடம் அடிபட்டு, மிதிபட்டு அல்லற்பட்ட நிலாவ்னா, மகன் பேவலைத் திருத்தி, அவனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க புரட்சித் தலைவனாக உருவாக்கி, தன்னை புரட்சி இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவள். […]

Read more

வாழ்விக்க வந்த காந்தி

வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ. ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், […]

Read more

கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ. நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் […]

Read more

மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், வயல்வெளி பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், விலை ரூ150. சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன் முதலாகப் பட்டினப்பாலை என்னும் கட்டுரை ஈறாக 20 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய நூல்களின் கருத்துக்களை வாழ்வியல் செய்திகளோடு எளிய மொழி நடையில் சுவைபட சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன். நன்றி: தினத்தந்தி, 16/10/2013   —-   ஜுபிடர் பிக்சர்ஸ் – ஜுபிடர், எஸ்.கே. ஹபிபுல்லா,  விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 26, […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more

சுவையான சுமைகள்

சுவையான சுமைகள், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 100ரூ. இளம் வயதில் கூலி வேலை செய்தவர். சோடா கலர் விற்றவர், கடும் உழைப்பினால் முன்னேறி, இன்றைக்கு கோடீஸ்வரர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விருந்தளிக்கும் ஏ.எஸ்.ஆர். கேட்டரர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ராஜநளன் என்று புகழ் பெற்ற ஏ.எஸ்.ராஜசேகர்தான் அவர். அவர் தன் சுயசரிதையை சுவையான சுமைகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். விறுவிறுப்பான நாவல்களைக் கூட தோற்கடிக்கக்கூடிய விதத்தில், புத்தகம் […]

Read more
1 2 3