சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001, விலை 150ரூ. காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது. அந்த நல்ல காதல், தமிழ்க்காதல். இதனை தலைப்பாக கொண்டு நூலாசிரியர் வ.சுப. மாணிக்கம் 7 தலைப்புகளில் அகத்திணையை மையமாக வைத்து எளிய நடையில் இலக்கிய நூலை எழுதியுள்ளார். தமிழர் கண்ட காதல் நெறியே அகத்திணையாகும். இதனை நம் முன்னோர்கள் முழுமையாக கற்றிருந்ததால், உலகையும், உடலையும், மனதையும், திருமணத்தையும் அவர்கள் […]

Read more

எண்ணங்களின் அதிசய சக்தி

எண்ணங்களின் அதிசய சக்தி , ஆரிசன் ஸ்வெட் மார்டன், தமிழில்: விமலநாத், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்கம்: 314, ரூ. 160. வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும் , எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது. நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு ‘செல்’லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more

பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 256, விலை 130 ரூ. பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியரான கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும், விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை ‘காடு வெளையட்டும் பெண்ணே! நமக்குக் காலமிருக்குது […]

Read more

கம்பனும் ஆழ்வார்களும்

கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.   வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]

Read more
1 2 3