கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

உணவே அமிர்தம் உணவே மருந்து

உணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. 40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு நாம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம். நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை […]

Read more

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்? டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.     […]

Read more

கலாம் அடிச்சுவட்டில்,

கலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ?, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]

Read more

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், விலை 250ரூ. முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்ற ஊர் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்து மீனவர்கள், மீன் பிடிக்கும் கலையில் வல்லவர்கள். அந்த மாவட்டத்தின் கடலோர கிழக்கு எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கு எல்லையான நீரோடி கிராமம் வரையுள்ள 45 கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் அந்தந்த ஊர்களுக்கே சென்று ஆராய்ந்து ஓர் அழகிய ஆய்வு நூலை முனைவர் ஜே. அருள்தாசன் […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]

Read more

செர்னோபிலின் குரல்கள்

செர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ. ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு […]

Read more

உலகத் திரைப்படம்

உலகத் திரைப்படம்,  வெ.சுப்ரமணியபாரதி, கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.225. “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, “ஒயிட் பலூன்’ போன்ற ஈரானியத் திரைப்படங்களை எத்தனை முறை பார்த்திருந்தாலும் இந்த நூலில் அப்படங்கள் குறித்துப் படிக்கும்போது, மீண்டும் கண்கள் கசிகின்றனவே, அதுதான் இந்நூலின் மிகப்பெரிய வெற்றி. எடுத்துக் கொண்ட தலைப்புக்கேற்ப உலகத் திரைப்படங்களில் உன்னதமானவற்றையெல்லாம் காட்சிகள், வசனங்களோடு கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். “உலக இலக்கிய’ கர்த்தாக்களின் தரத்திற்கு எந்த விதத்திலும் குறையாத திரை மேதைகளை, அவர்களது ஈடு இணையற்ற படைப்புகள் மூலம், ஆய்வுப் பார்வையோடு இந்நூல் அணுகியிருக்கிறது. […]

Read more
1 2 3 9