வணிகப் பொருளியல்

வணிகப் பொருளியல், கலியமூர்த்தி, தமிழ்நாடு சமூக மற்றும் பொருளியல் ஆய்வு நிறுவனம், சுடரொளி பதிப்பகம், சென்னை 106, பக். 456, விலை 150ரூ. நாட்டின் அடிப்படைப் பொருளாதாரத்தை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். அதுவும், வணிகப் பொருளியலை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். பொருளாதாரமே நாட்டின் ஆதாரம் என்பது திறம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நூலாசிரியர் அனுபவமிக்க பொருளாதாரப் பேராசியர் என்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் பல்வேறு தலைப்புகளில் நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளார். வணிகப் பொருளியல் என்றால் என்ன? என்பதை விளக்குவதில் ஒவ்வொரு […]

Read more

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 128, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-853-4.html நலிந்து வரும் விவசாயத் தொழிலால் அன்றாடத் தேவைகளையே சமாளிக்க விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதற்கான வழிகளைத் தெரிவிக்கிறது இந்த நூல். வாழ வழி தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்க்க சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் குறைந்த இட வசதியில், ஓய்வு நேரத்தை […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் […]

Read more

ஊமையன் கோட்டை

ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book  online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை […]

Read more

ஒன்றே உலகம்

ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் […]

Read more

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளிசங்கர், சென்னை புக்ஸ், சென்னை 91, பக். 488, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html அமைதி, சமாதானம், காருண்யம் ஆகியவற்றை நேசிக்கும் மானுடர்களுக்கு வேப்பங்காயாகக் கசப்பது ஹிட்லர் என்ற வார்த்தை என்றால் அது மிகையில்லை. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த 2ஆம் உலகப் போருக்கு வித்திட்டவர் ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் என்பது மட்டுமே அதற்குக் காரணமல்ல. சுமார் 5 கோடி பேரை காவு வாங்கியதாகக் கூறப்படும் இரண்டாம் உலகப்போரின் மூலம் உலகப் […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் […]

Read more

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் […]

Read more

சிந்தனை வகுத்த வழி

சிந்தனை வகுத்த வழி, ர.சு. நல்லபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 478, விலை 180ரூ. இன்றைய உலகம் என்பது மானுடத்தின் சிந்தனை வழியில் உருவானது. அதாவது உலக வரலாறுதான் இந்த நூல். ர.சு. நல்லபெருமாள் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கதை போலச் சொல்லிச் சொல்கிறார். 1965 இல் வெளியான இந்த நூல் தொடர்ந்து 3வது பதிப்பைக் கண்டிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நூல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்த உலக வரலாற்றைப் பல்வேறு தலைப்புகளில் […]

Read more
1 143 144 145 146 147 153