உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன், பசுபதி தனராஜ், தாய்த் தமிழ் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-189-0.html மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும் 10 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மகன், தலைமைச் செயலர், கவர்னர் என உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த […]

Read more

சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ. ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ […]

Read more

காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ. நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை […]

Read more

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை,  மதுரை 6, விலை 380ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-2.html பாப்லோ நெரூடாவின் பெயர் தமிழ் வாசகருக்கு நன்கு பரிச்சயமானது. அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளன. நெரூடா, பாரதிக்கு நிகரான மகாகவி. இடதுசாரிகளின் வெற்றியைப் பாரதி யுகப் புரட்சி என வருணித்துள்ளான். நெரூடா அந்த இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். நெரூடாவின் அரசியல் நிலைப்பாட்டால் அவர் வாழ்க்கை எப்போதும் நெருக்கடியிலேயே இருந்துள்ளது. இம்மாதிரியான தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் […]

Read more

இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி வெளியீடு, சென்னை, பக். 144, விலை 100ரூ. சிலப்பதிகாரத்தில் இசை வழிபாடு, ஆழ்வார்கள் வளர்த்த இசை வழிபாடு, பக்தி இயக்க வரலாறு, திருவிளக்கு வழிபாட்டில் பஜனை, இக்காலப் பஜனை ஒலி நாடாக்களில் பஜனை, என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளில் இசையால் எப்படி இறைவனை வழிபடுகின்றனர் என்பதை, ஆசிரியர் அழகுறச் சொல்லிச் செல்கிறார். இசை இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.   —- ஸந்தேக நிவாரணி பாகம் 7, ராஜகோபால கனபாடிகள், […]

Read more

கொதிக்குதே கொதிக்குதே

கொதிக்குதே கொதிக்குதே, (புவி வெப்பமடைதலும் நாமும்), ஆதி வள்ளியப்பன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-0.html இயற்கையின் சதிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய வாழ்க்கை. மழைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் மேகம் கருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி வறண்டுகிடக்கிறது. மலைப் பகுதிகள் தங்களது ஈரப்பதத்தை இழந்துகிடக்கின்றன. காலைக் காற்றையும் காணோம். மாலைத் தென்றலையும் காணோம். இரவின் குளுமையும் பறந்துவிட்டது. இதுதான் இயற்கையின் சதி என்றால், ஏன் சதி […]

Read more

ஜென்னல்

ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும் என்று ஆசி வழங்கினாராம் அந்த ஞானி. மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்? என்று வேறு அவர் கேட்டாராம். இந்த ஜென் கதையை […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more
1 2 3 4 5 9