குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?

குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?, தமிழில் அ. முத்துக்கிருஷ்ணன், வாசல் மற்றும் தலித் முரசு, சென்னை, பக். 104, விலை 130ரூ. அந்தியின் ஆதாரம் தெகல்கா செய்த புலனாய்வுகளின் தமிழாக்கம் குஜராத் படுகொலைகள் பற்றிய பதறவைக்கும் தகவல்களைத் தருகிறது. நாடெங்கும் உள்ள மதவாத அமைப்புகள் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலை மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டே மக்களுக்குக் காட்டுகின்றன. ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பலூன் பிம்பம் மெதுவாகக் காற்றில் அசைந்தாடுகிறது. இந்தத் தருணத்தில் வந்துள்ளது குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? 2002ல் கோத்ரா ரயில் […]

Read more

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி, கன்னிக்கோவில் ராஜா, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்றுதான் பெரும்பான்மையான கதைகளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம். கன்னிக்கோவில் இராஜா எழுதியுள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி சிறுகதை தொகுப்பில் இதுபோன்ற ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. அதையே தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்துள்ளார். இதில் இடம் […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

கர்ணா நீ மஹத்தானவன்

கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ. தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு […]

Read more

புலிகளின் புதல்வர்கள்

புலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 164, விலை 275ரூ. ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்த தெரியாத தமிழர்கள்? கவிஞராக அறியப்பட்ட பா. விஜய், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை இலக்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை. உடல் முழுதும் நகைகளை பூட்டிக்கொண்டு திரியவில்லை. மது குடித்தனர், மாமிசம் உண்டனர் என நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more

எனக்குள் எம்.ஜி.ஆர்.

எனக்குள் எம்.ஜி.ஆர்., காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், விலை 250ரூ. சிலர் எதை எழுதினாலும் அது ரஸமாகத்தான் இருக்கும். வேறு மாதிரி அவர்களால் எழுதவே முடியாது. அந்த வகையைச் சேர்ந்தவர் மறைந்த காவியக் கவிஞர் வாலி. தமக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை சுவைபட எழுதியிருக்கிறார் இந்தக் கட்டுரைகளில். நல்லவன் வாழ்வான் படத்துக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்து அதற்கு அண்ணாவும் ஓ.கே. சொன்னதுபோது தாம் ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டபடி திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தாராம் வாலி. […]

Read more

அடிப்படை வாதங்களின் மோதல்

அடிப்படை வாதங்களின் மோதல், தாரிக் அலி, தமிழில் கி. ரமேஷ், பாரதி புத்தகாலயம், விலை 350ரூ. சிலுவைப்போர், ஜி.காத், நவீனத்துவம். மத அடிப்படைவாதத்துக்கும் உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய அடிப்படைவாதத்துக்குமான மோதல்தான், கடந்த பல ஆண்டுகளாக உலகக் கொந்தளிப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. எந்த ஒன்றின் பக்கம் நின்றும் ஆதரிக்க இயலாதவாறு இரண்டுமே கொடூரத்திலும் கொடூரமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் சூழலில் இரண்டையுமே எதிர்க்கவேண்டும் என்று வலுவான வாதங்களை வைக்கிறார் தாரிக் அலி. பிறப்பால் அவர் பாகிஸ்தானி. முஸ்லிம் அல்லாத முஸ்லிம் என்று […]

Read more

காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட வியத்தகு அனுபவங்கள் வழியே தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய எண்ணப் பதிவுகளாக புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இக்கால இளைஞர்களும், அக்கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கின்றன. 1940களில் சங்கீத […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி), சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 400, விலை 225ரூ. இந்தியாவில் முகலாய அரசு உருவாகி வலிமை பெற்றது. பாபரின் ஆட்சி முதல் அவுரங்கசீப் ஆட்சி வரையிலான காலம் ஆகும். இக்காலத்தில் முகலாய மன்னர்கள் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, கட்டடக் கலை, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றில் ஏற்படுத்திய பல்வேறு மாறுதல்களை இந்நூல் விரிவாகச் சொல்கிறது. அதைப்போல அவுரங்கசீப் காலத்துக்குப் பிந்தைய முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. முகலாய மன்னர்களின் […]

Read more
1 154 155 156 157 158 336