தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ. வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற […]

Read more

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ. உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more

பண்டித ஜவஹர்லால் நேரு

பண்டித ஜவஹர்லால் நேரு, செ. சசிகலா தேவி, வின்வின் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 50ரூ. முதல் பிரதமரான நேருஜியின் வாழ்க்கை வரலாற்றை, சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். நேருஜியின் இளமைப் பருவம், முதல் மேடைப்பேச்சு, முதல் சிறைத்தண்டனை, சுதந்திரப் போராட்டப் பங்களிப்புகள், பிரதமராக இருந்தபோது நாட்டு முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட சேவைகளை சிறு சிறு சம்பவங்களாக எழுதியிருப்பதோடு, பல அரிய தகவல்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. நூலின் முக்கிய நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு துளி, ஒரு முறை, கர்நாடகாவில் நேருஜி காரில் சென்று […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more

விழித்திரு விடியல் விருது கொடுக்கும்

விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

மருதகாசி திரையிசைப் பாடல்கள்

மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more
1 174 175 176 177 178 336