நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் […]

Read more

இனி நான் டைகர் இல்லை

இனி நான் டைகர் இல்லை, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. பக்கங்கள்: 80, விலை: 60 ரூ சாளரங்களை திறக்கும் கதையாளி வெவ்வேறு வடிவங்களில் குறுகிய பக்கங்களில் நகர்கின்றன சமயவேலின் கதைகள். — சா. தேவதாஸ் காற்றின் பாடல் என்னும் கவிதைத் தொகுதியின் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் சமயவேலின் சிறுகதைத் தொகுதி, இனி நான் டைகர் இல்லை. 16 சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல், சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களை வாசகர்களுக்கு பரிச்சயமாக்குகிறது. கட்டுரை வடிவில் ஒரு கதை என்றால் அறிவியல் புனைவாக இன்னொரு கதை. […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more

வீரக் கண்ணகி

வீரக் கண்ணகி- ம.பொ.சிவஞானம்; பக்.160; ரூ.100; ம.பொ.சி.பதிப்பகம், சென்னை-41 சிலம்புச் செல்வர் எனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியுள்ள நூல். சிலப்பதிகாரத்தின் தனிச் சிறப்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலை, இராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குகிறார். இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சாராதவர்; கண்ணால் காணக் கூடிய திங்கள், ஞாயிறு, மழை போன்ற இயற்கை சக்திகளை வணங்கியிருக்கிறார் என்றும் அதே சமயம் நாட்டின் நடைமுறையைப் புலப்படுத்த ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றை இயற்றினார் என்றும் […]

Read more

அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002 பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ […]

Read more

வரப்பெற்றோம் – தினமணி – 06.08.2012

இங்கிதம் பழகு – கிரண் பேடி, பவான் சவுத்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக். 180; ரூ. 125, Wisdom Village Publication Division, 649, 04U, Udoyog Vihar, Phase V, Gurgaon, Haryana 122001. (Distributed by New Horizon Media Private Limited, Chennai.) இருந்தமிழே, உன்னால் இருந்தேன் – மலையமான்; பக்.176; ரூ.110; அன்பு பதிப்பகம், சென்னை-18; )044- 2499 6611. வேதாத்திரியம் – ஓர் இலக்கியச் சோலை – ப.வெள்ளை; பக்.38; ரூ.25; ப.வெள்ளை, செட்டியக்குடித் தெரு, […]

Read more

தமிழில் திணைக் கோட்பாடு

தமிழில் திணைக் கோட்பாடு – எஸ்.ஸ்ரீகுமார்; பக்.126; ரூ80; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98 தமிழ் இலக்கியம் நில அடிப்படையில் அவற்றின் கூறுகளுடனும், இயல்புகளுடனும் வெளிப்பட்டது. அப்படி வெளிப்பட்ட இலக்கியங்களைத் திணை இலக்கியம் என்று அழைக்கிறோம். நிலம் சார்ந்த இயற்கையைப் பின்னணியாகக் கொண்ட மனித வாழ்வைப் புனைவதுதான் திணை இலக்கியம். திணை பற்றிய செய்திகளைக் கூறும் திணை இலக்கியங்கள் நாகரிகத்தின், பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களாகும். எனவே சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியம் என்றழைப்பதே பொருத்தமானது என்கிறார் நூலாசிரியர். இந்தத் திணைக் […]

Read more
1 332 333 334 335 336