உள்ளதைச் சொல்கிறேன்

உள்ளதைச் சொல்கிறேன்,மதுரை தங்கம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-9.html புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர், சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. […]

Read more

சு. சண்முகசுந்தரமூர்த்தியின் நான்கு கதைப் பாடல்கள்

நான்கு கதைப் பாடல்கள், சு. சண்முகசுந்தரம், சாகித்திய அகாதெமி, சென்னை 18, பக்கங்கள் 496, விலை 220ரூ. ஏட்டில் வந்த இலக்கியங்கள், பண்டிதர் இலக்கியம் என்றும், ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள், பாமரர் இலக்கியம் அல்லது நாட்டுப்புற இலக்கியம் என்றும் கூறுவர். ஏட்டில் எழுதப்படாத பாட்டுகதை, பழமொழி, விடுதலை, புராணம் போன்றவை தற்காலத்தில், அச்சில் வந்து இலக்கிய இன்பம் அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூலில், கட்டமொம்மு கதை, தேசிங்கு ராஜன் கதை, மதுரை வீரன் கதை, பழையனூர் நீலி கதை என்ற நான்கையும் உரைநடையில் சுருக்கமாகவும், […]

Read more

பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]

Read more

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில்

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில், ‘பொம்மை’ சாரதி,  பக். 432, ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 180 வேத வியாஸரால் இயற்றப்பட்ட மகாபாரதம், தலைசிறந்த பண்புகளையும், தர்மநெறிகளையும் விளக்குவதால், இது ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது. இதில் மனித மனத்தின் பலவீனங்கள், திருந்தும் வழிகள், இறைநெறி, தத்துவம், அரசியல், சரித்திர கால நிகழ்வுகள்… என்று பல்வேறு செய்திகள், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதில் வரும் ஏராளமான கிளைக் கதைகளும் வாழ்க்கை நெறிகளைப் போதிப்பவையே. […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, முனைவர் துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, சென்னை – 42, விலை 700 ரூ. தமிழின் தொன்மையான சங்கப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே. இவை பாணர்களோ, புலவர்களோ பாடியது அல்ல. அவை அனைத்தும் மக்கள் பாடியவை. சங்ககாலப் புலவர்கள் எனக் கூறப்படும் புலவர் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. சமணர்கள் தமிழகம் வந்து தங்கள் மதத்தைப் பரப்ப முற்பட்டபோது மக்கள் (தமிழ்) மொழியில் புழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இதுவே பின்னர் சங்க இலக்கியம் என அழைக்கப்பெற்றது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, நெடுந்தொகை […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா,  அருண் பதிப்பகம், திருச்சி 1, பக்கம் 672, விலை 125 ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், […]

Read more

சங்க இலக்கியங்களில் மனித நேயம்

சங்க இலக்கியங்களில் மனித நேயம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, வனிதா பதிப்பகம், சென்னை – 17,  பக்கம் 240, விலை 140 ரூ. மனிதநேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் இன்றைய சமுதாயத்தில், சங்க இலக்கிய மக்கள் எவ்வளவு மனித நேயத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அகத்தின் தூய்மை, புறத்தின் மேன்மை, அறத்தின் மாண்பு, உலகப் பொதுமைச் சிந்தனை, உயிரிரக்கப் பண்பு, மனிதமும் மானமும் என்கிற ஆறு தலைப்புகளில் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் புரியவைத்துவிடுகிறார். ‘உயிரிரக்கப் பண்பு’ என்கிற இயல்தான் […]

Read more
1 53 54 55 56