மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more

தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more

காலம்

காலம், ராஜம் கிருஷ்ணன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, சென்னை, விலை 80ரூ. சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை விளக்கும் நூல். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் என ஆழமாகப் பேசுகிறது நூல். சமையலறையின் அமைப்பிலிருந்து வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வழிகள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- போர்ப் பறவைகள், வி.டில்லி பாபு, மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 104, விலை 120ரூ. தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. புதிய தலைமுறை வார இதழில் வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என பல வகையான மனிதர்கள். ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், […]

Read more

பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இலக்கிய இதழில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு பக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றில், வாழ்க்கையில், நடைமுறையில் கண்டறிந்த உயர்ந்த சிந்தனைகளை கருவாக்கி, தன்னம்பிக்கையை எருவாக்கி, நல்ல எண்ணங்களை பயிராக்கி இருக்கிறார். இந்த நூலில் உள்ள 44 கட்டுரைகள் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பண்புகளை கற்றுத் தருகிறார். இதமாக நடந்து கொண்டால் இமயமாக உயரலாம். எளிமையாக இருந்தால் எவரையும் கவரலாம் என்பதை […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், மதி நிலையம், சென்னை, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-2.html சோமபானம் என்பது எந்தவகை பானம்? சிந்துவெளி நாகரிகம், வேத காலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாச்சாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும், அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ் பேப்பர் […]

Read more

சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1919இல் பிறந்தவர் எச். வேங்கடராமன். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர ஆதீன நிலையத்தில் தினமும் மாலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை இலவசமாகக் கற்பித்து வந்தார். மேலும் […]

Read more

திரை இசை வாழ்க்கை

திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், சென்னை. வாழ்வின் குறிப்புகள் தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக்கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ. நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய […]

Read more
1 45 46 47 48 49 88