சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல் திருமாவளவன், கரிசல் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-324-7.html பூவிழியன் தொகுத்திருக்கும் இந்நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலித் மக்களின் நலனுக்காக அவர் பேசிய பேச்சுகளும், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- தஞ்சை பெரியகோயில், முனைவர் வி.அ. அன்பழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை […]

Read more

உளிகள் வடித்த துளிகள்

உளிகள் வடித்த துளிகள், தலைமையாசிரியர் யா.ச.யாகு அடிகள், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், சிவகங்கை மாவட்டம், விலை 100ரூ. சிவகங்கை மாவட்டம், தேகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 27 ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். நல்லொழுக்கம் நலவாழ்வு, இதயம் ஒரு கோவில், ஏணியாய் தோணியாய என்ற தலைப்புகளில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.   —- வரலாற்று வெளிச்சத்தில் போர்த்துகீசியர்கள், குஞ்ஞாலிகள், சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 500ரூ. இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, வியாபாரம் செய்ய […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?, ஜி.ஆர். இரவீந்திரநாத், சமூக மகத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், சென்னை, விலை 20ரூ. குஜராத் நலமா? குழந்தைகளின் நலம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அளவுகோல். பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிற குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் மருத்துவ அக்கறையை மருத்துவ அறிஞர்கள் எடைபோடுகின்றனர். ஏதோ விதி முடிந்து போச்சு. செத்துபோச்சு என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்? அதென்னப்பா வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் விதி முடிய மாட்டேங்குது? என்று குறுக்குகேள்வி கேட்கும் […]

Read more

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, திருத்திய முதல் பதிப்பு மே 2014, தமிழாக்கம் எஸ். வி. ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 550ரூ. மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் […]

Read more

காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ. அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் […]

Read more

உலக அரசியல்

உலக அரசியல், சுப்பிரமணியன் சந்திரன், பாரதி புத்தகாலயம். தன்னலம், சமுதாய நலம், தேசிய நலன் ஆகியவற்றை கடந்து, ஓர் உலக அரசியலுக்கு இலக்கணம் தேடும்வகையில், தத்துவ அறிஞர்கள் சிந்தித்தனர். ஆனால், நடைமுறையில் இந்த நலன்களை பலப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியே உலக அரசியலாக மாறியுள்ளது. தேசிய நலனையும், தேசிய நலனுக்காக சமுதாய நலனையும், சமுதாய நலனுக்காக தன்னலத்தையும் துறந்துவிட முடியுமா என்ற கேள்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்மிடத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த நூலில், இந்திய விடுதலை, முதல் உலகப்போர், இரண்டாம் உலக போர், அமெரிக்க விடுதலை, இங்கிலாந்து […]

Read more

மாமனிதர் நரேந்திரமோடி

மாமனிதர் நரேந்திரமோடி, திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குஜராத் முதல் மந்திரி – பிரதமர் வேட்பாளர் இப்படி பல சிறப்புகள் பெற்ற நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீரமண பக்த சமாஜம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை. புலமையும் பக்தியும் […]

Read more

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ. பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை […]

Read more
1 27 28 29 30 31 44