கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-196-6.html இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை நெருங்கிய காலகட்டத்தில் அங்கு ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். அவர் இலங்கைப் போர் குறித்தும், விடுதலைப்புலிகளின் இறுதி நாட்கள் கறித்தும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார். அதை மூத்த பத்திரிகையாளர் கானகன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ரத்தம் […]

Read more

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ. எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் […]

Read more

கவிதை அலைவரிசை

கவிதை அலைவரிசை, பேராசிரியர் இரா. மோகன், விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக்கங்கள் 168, விலை 120ரூ. கவிதைகளை ஆய்வு செய்வது என்பது கவிதைகள் எழுதுவதைவிட கடினமானது. முனைவர் தமிழண்ணல் சொன்னதுபோல், இத்தனை கவிஞர்களையும் அவர்களின் அத்தனை கவிதைகளையும் படித்து ஆய்வு செய்ய இவருக்கு மட்டும் நேரம் எங்கே இருந்து கிடக்கிறது. சமகாலக் கவிஞர்கள் பதினெட்டுப் பேரின் கவிதைகளை மக்களுக்கு புதிய கோணத்தில் எடுத்தியம்பும் முயற்சி இது. கவிஞர் குலோத்துங்கன், கவிஞர் […]

Read more

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html   மௌனப்படம் தொடங்கி வண்ணப்படங்கள் வரையிலான தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி இந்த நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்ச் சினிமா வரலாற்றின் அடிப்படை தகவல்களைத் தாண்டி சுதந்தர போராட்ட காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பங்களிப்பு மற்றும் எழுச்சி பெற்ற திராவிட இயக்க அரசியலின் பிரதான வெளிப்பாடாக சினிமா மாறியது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வு பூர்வமாகவும் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் அகநி வெளியீடு, விலை 300ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html கி.பி. 1214க்குரிய செப்பேடு ஒன்று திரிபுவனம் கோயிலில் இருப்பதாக, அங்கே அறங்காவலராக இருந்த பெண்மணி ஒருவர் கோயம்புத்தூர் கே.வி. சுப்ரமணிய அய்யர் என்ற செப்பேட்டு ஆய்வாளருக்குத் தெரிவித்தார். உரியவர்களின் அனுமதி பெற்று, தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் ஒன்பது ஆண்டுகள் போராடி அதை 1939இல் படியெடுத்துத் தந்தார்களாம். இப்படியே ஒவ்வொரு செப்பேட்டுத் தொகுதியையும் ஆய்வாளர்கள் தேடித் தேடிப் படியெடுத்திருக்கிறார்கள். செப்பேட்டில் தானம் […]

Read more

வலை உணங்கு குருமணல்

வலை உணங்கு குருமணல், மு. புஷ்பராஜன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 184,விலை 140ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-197-4.html குருமணல் சுவடுகள் புலம்பெயர்ந்து போன ஈழத தமிழருக்கு நூல்கள்தான் தமது நிலத்தைக் காட்டுகின்றன. தன் கண்ணீராலும் பட்டினியாலும் எம்மை வளர்த்த அம்மாவிற்கு என்று புஷ்பராஜன் இந்த நூலை எழுத ஆரம்பிக்கும்போதே மனது வலிக்கிறது. இது வெறுமனே மு. புஷ்பராஜனுடைய அம்மாவை மட்டுமல்ல. அந்த குருநகர் என்ற யாழ்ப்பாணத்து மீனவக் கிராமத்தின் எல்லா ஏழை அம்மாக்களையும் கண்ணுக்கு முன்னால் […]

Read more

இராமாயணத் தூமணிகள்

இராமாயணத் தூமணிகள், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 233, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, பக்கங்கள் – 1016, விலை 495ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-7.htm இந்நூலாசிரியர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2002 -ல் இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்கிற பக்தி ததும்பும் நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமிழில் வெளியாகியுள்ள இராமாயணத் தூமணிகள் என்ற இந்நூல் சற்று வித்தியாசமானது. தூமணிகள் என்பதற்கு தூய மணிகள் […]

Read more

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை, தேவ்தத் பட்நாயக், தமிழில்-சாருகேசி. விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கம் 496, விலை 160 ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-6.html பெண் ஆசையின் விளைவு ராமாயணம் என்றால், மண் ஆசையின் விளைவு மகாபாரதம் என்பர். இவை இரண்டும் இந்தியாவின் இரு இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. JAYA AN ILLUSTRATED RETELLING OF MAHABHARATA என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், வழக்கமான மகாபாரதக் கதையுடன், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாய் வழியாக உலவும், மகாபாரதக் […]

Read more

தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு

தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு – பெரியகுளம் கு.அ.ரெங்கராஜன்; பக்.216; ரூ.200; இராஜா வெளியீடு, 10, (மேல்தளம்) இப்ராஹிம்நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி. மிகவும் நுட்பமான முறையில் தகவல்களைச் சேகரித்து தென்னிந்திய செளராஷ்ட்ர மக்களது வரலாற்றை மிகவும் எளிமையாகவும், தகவல்களை முழுமையாகவும், சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களோடும் நூலாசிரியர் விவரித்திருப்பது தனிச்சிறப்பாகும். புராண காலத்திலிருந்து வரலாற்றை விவரிக்கும் நூலாசிரியர், சரித்திர காலத்திற்கான ஆதாரங்களுடன் அதை விளக்கியிருக்கிறார். செளராஷ்ட்ர மக்களது சமூக அமைப்பு, பண்பாடு, இடப்பெயர்வால் அதில் ஏற்பட்ட மாற்றம், தற்போது தென்னிந்தியாவில் அம்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே!

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே! முனைவர் துளசி இராமசாமி,  பக். 888, வெளியீடு: விழிகள், 664, 3வது தெரு, வீனஸ் குடியிருப்பு விரிவு, வேளச்சேரி, சென்னை – 42. விலை ரூ. 700 பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும், நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றைச் சேகரித்துத் தொகுத்தவை என்றும், அதில் வரும் அடி வரையறைகளைக் கொண்டே தொகுப்புகளுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து முனைவர் துளசி. இராமசாமி இந்நூலை எழுதியுள்ளார். இவை எல்லாம் எழுத்து – தமிழ் – பிராமி கண்டுபிடிக்கப்பட்ட பின் தொகுக்கப்பட்டவை என்பதையும் ஆய்வில் […]

Read more
1 81 82 83 84