இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள், தமிழ் உயராய்வு மையம், நாகர்கோவில். இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரு குடும்பக் கதையாக அமைந்தாலும், அதனுள் மூவேந்தர்கள், மூன்று நாடு, மூன்று தமிழ் என பல மூன்றின் தன்மைகள் காணப்படுகின்றன. இரண்டு நூலையும் சேர்த்து, இரட்டைக் காப்பியங்கள் என்று உரைப்பது மரபு. இதனுள் பல மதிப்பீடுகள் பேசப்படுகின்றன. சமயம், நாடு, மன்னன், குலம், தனிமனிதன் என பல நிலைகளை […]

Read more

கல்லாடம்

கல்லாடம், முனைவர் பழ. முத்தப்பன், உமா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரின் 100 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள் அமைப்பினைக் கொண்டு பாடப்பட்ட நூல். பாடியவர் கல்லாடர். இதனால் இந்த நூலுக்கு கல்லாடம் என்ற பெயர் வந்தது. எட்டுத்தொகை நூலான கலித்தொகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அகப்பொருள் இலக்கியம் கல்லாடம் ஆகும். பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களும், தொடர் அமைப்புகளும் சங்க இலக்கிய மரபையொட்டித் திகழ்கின்றன. கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழி, இந்த நூலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தப் பாடல்களுக்கு முனைவர் […]

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. புதுக்கோட்டை வெங்கட்ராமன் தமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணராமல், சென்னையிலும் வெளியிடங்களிலும் நடைபெறுகிற இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் இளமை உற்சாகத்தோடு பார்வையாளராகப் பங்கேற்கிறவர் பி.வி. என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்படுகிற கண்ணபிரான் அச்சகம் வெளியிட்டது டிங்டாங் சிறுவர் வார இதழ். இதன் ஆசிரியராக இருந்த வடமலையழகன்தான் இந்த பி.வி. டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.வி. இவர் கேரள மாநிலம் கொச்சினிலும் புதுக்கோட்டையிலும் மதுரையிலும் பணியாற்றியபோது, […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பத்திரிகை என்று எழுத்துலகில் பன்முகத்தன்மையுடன் பயணிக்கும் இந்நூலாசிரியர், பல்வேறு சமயங்களில் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை வாசிக்கும்போதே இவருக்கு பாரதி மீதுள்ள ஈர்ப்பை உணர முடிகிறது. பாரதியும் பாரதமும், பாரதியும் இஸ்லாமும், பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் முதலான கட்டுரைகளில் மட்டுமல்ல, இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலுமே பாரதியின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதி, வ.வே.சு.ஐயர், கல்கி, […]

Read more

இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லா பிரச்சினைகளையும் சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ. ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் […]

Read more

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்முதாய் பதிப்பகம், சென்னை, சிலம்பு, மேகலை ஆகிய நூல்களின் விலை ஒவ்வொன்றும் 450ரூ. தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழில் காப்பியம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் முதல் இன்று வரை பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. காப்பியங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தை மையப்படுத்தியே உள்ளன. பண்டைய காலம் முதல் தமிழர்களின் ஒழுக்கங்களையும், பண்பாட்டையும் காப்பியங்கள் பறைசாற்றி வருகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை […]

Read more

தமிழ்ச் சுரபி

தமிழ்ச் சுரபி, இலக்கியப்பீடம், சென்னை, விலை 450ரூ. அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் 1948ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் பிரசுரித்த சிறந்த கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார். தமிழ்த்தென்றல், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ. பெ. விசுவநாதம், யோசி சுத்தானந்த பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், தி.க.அவிநாசிலிங்கம் செட்டியார், கி.வா. ஜெகந்நாதன் உள்பட 44 பேர்களின் கட்டுரைகளும், உமாசந்திரன், குசுப்பிரியை, எம்.எஸ். கமலா, சரோஜா ராமமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ். ராமையா, லா.ச. […]

Read more
1 24 25 26 27 28 88