ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரித்தி ஷெனாய், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-294-0.html தனது ரகசிய ஆசைகளைத் தனக்குள் பட்டியலிட்டுக்கொள்ளும் தீக் ஷா, அவற்றை தனது வாழ்க்கையில் அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளும் நிலையில் அவள் வாழ்வே திசை மாறிப்போய்விடுகிறது. ஆனால் அதை வலியாக இல்லாமல், தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கும் புள்ளியாக மாற்றிக்கொண்டுவிடுகிறாள் அவள். 19 வயதில் திருமணமாகி, ஒரு மகனைப் பெற்று, பொறுப்புள்ள தாயாக, மனைவியாக, நல்ல மருமகளாக வாழும் அவளுக்கு […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை, நடேசன், மகிழ் வெளியீடு, பக். 402, விலை 300ரூ. புதிய உலகின் வாழ்க்கைப் புலம் புத்தம்புதிய கதைக்களத்தில் பயணிக்கும் இந்நாவல் மூலம் புலம்பெயர் எழுத்தாளர்களில் நடேசன் கவனமீர்க்கிறார். கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோக சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தை தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நம்மூரில் வளர்ப்பதைப்போல ஏதோ எப்படியோ என்று யாரும் வளர்ப்பதில்லை. அவற்றின் மீது பொழிகின்றன அன்பும் எடுக்கின்ற கரிசனையும் நாம் நம் சகமனிதர்களுக்குக் கொடுப்பதையும்விடப் பல படிகள் மேலானது. அங்கே […]

Read more

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ. கிராமத்தின் கதை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது. அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள். இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே […]

Read more

எருது

எருது, கார்த்திகை பாண்டியன், எதிர் வெளியீடு. மொழிபெயர்ப்பு நாவல்கள் பயனுள்ளவையா? கார்த்திகை பாண்டியன் எழுதிய எருது நாவலை சமீபத்தில் வெளியிட்டோம். இந்த நாவல், மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக அறியப்பட்டு, தமிழுக்கு அறிமுகம் ஆகாமல் உள்ள நாவல்களின் தொகுப்பு. தென் அமெரிக்கா, ஐரேபாப்பா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலம் மற்றும் அவரவர் மொழிகளில் எழுதியவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சீன எழுத்தாளர் மோயான் எழுதிய எருது என்ற நாவலின் பெயரையே, இந்த நாவலுக்கும் சூட்டியுள்ளார் ஆசிரியர். எருது நோபல் பரிசு பெற்ற […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து […]

Read more

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 600, விலை 550ரூ. தமிழ் சினிமாவில், முதல்வராக பலமுறை நடித்த பாரதி மணியைப் பற்றிய புத்தகம் இது.ஆனால் நிஜத்தில் முதல்வர்களை காட்டிலும், அதிக பலம் படைத்த அதிகார மையமாக இவர் இருந்ததை, இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. தொழிலதிபர் பிர்லாவின் செயலர். நாடக சபையின் நிர்வாகி என இவரின் பல்வேறு முகங்களை, புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் குறித்து சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற பல்வேறு […]

Read more

புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 200ரூ. பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப்பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள். கடைசியில் தன் […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை. ஆசிரியருக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய […]

Read more
1 40 41 42 43 44 66