மீசை என்பது வெறும் மயிர்

மீசை என்பது வெறும் மயிர், ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-1.html மீசை அலங்காரமா? அதிகாரமா? ஆதவன் தீட்சண்யா எழுதிய மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சந்தியா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நந்தா ஜோதி பீம் தாஸ் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ஒட்டி, நாவல் செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவருக்கு, கல்வி மறுக்கப்படுகிறது. அவர் ஊரை விட்டுச் சென்று கடந்த 1964ல், சுனாமியால் தனுஷ்கோடி அழிந்தபோது, […]

Read more

சிவப்புத் தகரக் கூரை

சிவப்புத் தகரக் கூரை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 272, விலை 225ரூ. நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஞானபீடவிருது பெற்ற நிர்மல் வர்மாவின் நாவல் இது.  பருவ வயதில் உள்ள ஒரு சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்குழப்பங்கள், உடல் ரீதியாக எழும் கிளர்ச்சிகள், குதூகலமும், சுற்றியுள்ளன மனிதர்களின் புதிரான நடத்தைகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என்று எல்லாமுமே நாவலாக உருப்பெற்றுள்ளன. ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்கள் சித்திரிக்கப்படுவதுடன், பெண்களின் வாழ்வு குறித்த பெரும் விவாதத்தை ஒரு சிறுமியின் வாழ்வியல் […]

Read more

மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

திரை

திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more

வெண்முரசு

வெண்முரசு, ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம். ‘மகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் வெண்முரசு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு என்ற நாவலின் முதல் பகுதியை, சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தை புதிய பார்வையில், இந்நாவல் பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் அவரது இணைய பக்கத்தில் வெண்முரசு வெளியிடப்படும் என, அறிவித்து ஜெயமோகன் எழுதி வருகிறார். வீட்டில் நம் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் சென்னா கதைகள் மூலமும், ராஜாஜியின் வியாசர் விருந்து, பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட பல நூல்கள் மலமும், […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகிலன், கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-1.html பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், டாப் த்ரில்லர் நாவல்களில் ஒன்றான AN ACE UP MY SLEEVE என்ற ஆங்கில நாவலை தமிழில் அகிலன் கபிலன் மொழிபெயர்த்துள்ளனர். எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால் எளிதில் நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம். […]

Read more

2 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை

 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை, சேத்தன், ஜெய்கோ பப்ளிஷிங், மும்பை, பக். 362, விலை 199ரூ. 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம் பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிர்ஷ்சிட்டி பேங்கில் வேலை செய்தாலும் சொந்த […]

Read more

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற […]

Read more
1 41 42 43 44 45 66