சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ். விகடன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு  என்கிறோம். ஆனால் இந்த 7 அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. வடஅட்லாண்டிக் சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது. அந்த வழியாகச் செல்லும் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போகின்றன. அதற்குக் காரணம் என்ன? உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் […]

Read more

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்

விடியலை நோக்கி முடிவற்ற பயணம், த.ஜெ.பிரவு, ஜெ. அனிதா பிரபு, சென்னை, விலை 250ரூ. லட்சியங்களின் தோல்வி இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை எழுதியுள்ளது த.ஜெ.பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இரந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ.பிரபு. […]

Read more

சகுந்தலா வந்தாள்

சகுந்தலா வந்தாள், வா.மு.கோமு, வெளியீடு நடுகல் பதிப்பகம், திருப்பூர், விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-266-1.html உருக்கும் வாழ்க்கை எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்துவிடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறுவென்று வந்திருக்கிறது. கல்பனா, ஜான், சகுந்தலா, கமலக்கண்ணன் என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன்

எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை முதல்பாகம் ரூ.460, இரண்டாம் பாகம் 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-1.html திரைப்படத்துறையிலும், அரசியலிலும் சாதனைகள் புரிந்து, வரலாற்றில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். எமனுடன் இருமுறை போராடி வெற்றி பெற்றவர். அவர் தன் வாழ்க்கை நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் ஒரு வார இதழில் தொடராக எழுதிவந்தார். சுவையான தொடர். எனினும் அது முற்று பெறவில்லை. எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதை 2 பாகங்களாக நூல் வடிவில் […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இரண்டு கனவுகளுக்கு நடுவே விரிகிறது நாவல். நீது கனவு காண்கிறாள். அதில் அவளுடைய அம்மா பிரியம்வதா நீண்ட மணற்பரப்பில் ஒரு குன்றின் அருகே தனியாக அமர்ந்து தியானத்தில் இருக்கிறாள். தன்னைத் தேடி கண்டடையும் மகளிடம், தன் தியானத்தை கலைக்க வேண்டாம் போய்விடு என்கிறாள். நாவலின் இறுதியில் ஒரு பனிப்பரப்பில் அவள் தியானம் தொடர்கிறது. பிரியம்வதா ஒரு தனியார் சிமென்ட் […]

Read more

கானகம்

கானகம், லட்சுமி சரவணக்குமார், சென்னை மலைச்சொல் பதிப்பகம். வெற்றிக்காக போராடும் இரக்கமற்ற மிருகங்கள் இளம் எழுத்தளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சென்னை மலைச்சொல் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகம் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more
1 43 44 45 46 47 66