செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம். நன்றாக தூங்குபவனுக்கு இரு மனைவிகளாம்! மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நூலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கோபல்ல கிராமம்’ உண்மை சம்பவமா, நாவலா, வரலாற்று பதிவா என, என்னால் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. இஸ்லாமிய மன்னர்களுக்கு பயந்த, ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறியோர் பற்றியது அந்த நூல். தமிழகத்தின் ஒரு பகுதியில் குடியேறி, அங்கு விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வாழ்ந்த, கோபல்ல கிராம மக்களின் […]

Read more

படம் பார்த்து படி

படம் பார்த்து படி, சுரேகா, மதி நிலையம், பக். 128, விலை 100ரூ. நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துக்களைப் புரிய வைப்பதுதான் நூலாசிரியர் சரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு பல நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. பிரச்சினையை அணுக தெரியாமல் தவிக்கின்றனர். நண்பர்களின் பிரச்னைக்கான தீர்வுகளை, பாய்ஸ், ரமணா, அற்புதம், வானவில், ஐயா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய கீதை போன்ற பிரபல சினிமா […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more

மானுடப்பண்ணை

மானுடப்பண்ணை, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. வேலை இல்லாத, கிடைக்காத, கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வரப்பெறாத இளைஞர்கள், இந்தத் தேசத்தில், தெரு நாய்களைப் போல வாழச் சபிக்கப்பட்டவர்கள். இந்த துருப்பிடிக்கும் இளமையாளர்கள் பற்றிய சரியான சமூகக் கவலையே இந்த நாவல். கதாநாயகனை பெரியாரியத்தின் பக்கம் இழுக்கும் பாலகிருஷ்ணன். காதல் பக்கம் தள்ளும் நீலா, மார்க்சியத்தில் பக்கம் வசீகரிக்கும் தோழர், மண்ணின் மைந்தர் தண்டபாணி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்கள். வேலையில்லாத இளைஞன் மன உளைச்சல், குடும்ப உறவு, காதல், வேலை வாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு […]

Read more

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ. பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது. இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், நூல் கிடைக்கும் இடம் கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை, தனிப் பிரதி 225ரூ, ஐந்து தொகுதிகளுக்கும் விலை 800ரூ. எழுத்தாளர் சவீதா எழுதிய 18 நாவல்கள், 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. காதல், கிரைம், குடும்பம் என்று எதை மையமாக வைத்து எழுதினாலும் கதைப்போக்கிலும், எழுத்து நடையிலும் வித்தியாசங்களை விதைப்பதால், கூறியது கூறல் என்ற குறைபாடு எழவில்லை. ஒவ்வொரு நாவலிலும் காணப்படும் நகைச்சுவை, நவீன உவமைகள், நடையில் வேகம், எழுத்தில் லாவகம் வாசகர்களை வசியப்படுத்தும். துள்ளலும், துடிப்பு மிகுந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ. இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது […]

Read more

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், சந்திரா, பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நீலத்தின் காதல் காதல், காத்திருப்பு, தனிமை, பயணம், கோபம் உள்ளிட்ட பல உணர்வு சார்ந்த அனுபவங்களைத் தேக்கி வெளியாகியிருக்கிறது வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் என்கிற இந்த கவிதை நூல். காதலைப் பிரயாதீர் என்ற தலைப்பில் இருக்கும் ஒரு கவிதை மட்டுமேகூட இந்த தொகுப்பை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்ல போதுமானது என்று சொல்லலாம். மழையடிக்கும் பொழுதுகள் காதலைச் சொல்லும் தூத கணங்கள் அன்பர்களே உங்கள் காதல் முறிவினை அப்போது நிகழ்த்தாதீர்கள் […]

Read more
1 38 39 40 41 42 66