தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள், கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. நட்பின் பெருமை பேசும் ஒரு பயண நூல் தென் ஆப்பிரிக்கப் பயண அனுபவங்கள் என்று தலைப்பிட்டிருந்தாலும் இந்த வித்தியாசமான நூலில் நீண்ட கலமாக நிலவிவருகிற நட்பின் பெருமையை நினைவு கூர்கிற பகுதிகள் அதிகம். 1970, 1990 ஆண்டுகளில் அறிமுகமான நண்பர்களை 2011, 12 ஆண்டுகளிலும் அதே பாசத்துடன் சந்திப்பது என்பது அதிகம் பேருக்குக் கிடைக்க முடியாத பேறு. அப்படிப்பட்ட அரிய வாய்ப்புகளைப் பெற்றதோடு அந்த நினைவுகளைப் படப்பதிவுகளாகவும் […]

Read more

சத்யஜித் ரே

சத்யஜித் ரே, திரைமொழியும் கதைக்களமும், பிரக்ஞை பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. அறிந்துகொள்ளலாம் சத்யஜித் ரேயை இந்திய எதார்த்தத்தை முதல்முறையாக செல்லுலாய்டில் பிடித்த திரைக்கலைஞர் சத்யஜித் ரே. வணிக சினிமாவுக்கு மாற்றாகத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கும் திரைப்பட முயற்சிகளுக்குத் தூண்டுதலைத் தருபவராக மறைந்த பிறகும் சத்யஜித் ரேயின் படைப்புகள் இருந்துவருகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர் ரே. சத்யஜித் ரே என்னும் […]

Read more

துளு நாட்டு வரலாறு

துளு நாட்டு வரலாறு, மயிலை சீனி. வேங்கடசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 108, விலை 75ரூ. பண்டைய தமிழக வரலாற்றைப் போலவே துளு நாட்டு வரலாறும் சங்க இலக்கியங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தென் கன்னடத்தை துளு நாடாகக் காட்ட நூலாசிரியர் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியப் பாடல்களின் சான்றுகள் இப்போதும் மிகவும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. துளு நாட்டின் பெயரை மாமூலனார் தனது பாடலில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதைப் பல பாடல்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார். […]

Read more

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ. காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி. ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் காந்திஜியின் முதல் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

இந்தியா வரலாறும் அரசியலும்

இந்தியா வரலாறும் அரசியலும், டி. ஞானய்யா, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 400ரூ. 95 வயதையும் தாண்டி வாழும் வரலாறாக வாழ்ந்துகொண்டு இருப்பவர் தோழர் டி.ஞானய்யா. இன்றும், இன்னும் எழுதிக்கொண்டும் இருக்கிறார். நீண்ட ஆயுளுக்கு உடல் நலம் மட்டும் காரணம் அல்ல, சிந்தனைத் தெளிவும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இவர். அவரது வன்மையான எழுத்தில் இந்தியாவின் வரலாறு சீரான பார்வையுடன் செதுக்கித் தரப்பட்டுள்ளது. புத்தகங்களில் இருந்து அல்லாமல், தன்னுடைய 74 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களின் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளை அவர் […]

Read more

வெற்றிப் படிக்கட்டு

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. வசந்தகுமாரின் இரண்டாவது வெற்றிப் படிக்கட்டு இது. படிப்போரையும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவைக்கிறார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பினரும், எல்லா தொழில் செய்பவர்களும், அவர்கள் சிறு வியாபாரிகளாக இருந்தாலும் சரி, பெரும் தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பும்வகையில் வெற்றிக்குரிய வழிகாட்டுதலைத் தந்துள்ளார். அதற்குப் பொருத்தமான உன்னதமிக்க சின்னஞ்சிறிய கதைகளைக் கூறிச் சொல்வது நூலின் சிறப்பு. தன்னம்பிக்கை, […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more
1 60 61 62 63 64 104