தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ. தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு. அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான […]

Read more

நினைவு நாடாக்கள்

நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, விகடன் பதிப்பகம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-7.html கவியரசர் கண்ணதாசனுக்கு ஒப்பாக வைத்து பாராட்டப்படுபவர் இந்நூலாசிரியர். இவர் கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் திரைத் துறையில் நுழைந்தது முதல் அதில் கோலோச்சியது வரை அத்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவுகூறும்போது, நம்மையும் அந்தச் சூழலுக்கு கூட்டிச் செல்கிறார். தவிர இவரது எழுதிதும், நடையும் செறிவூட்டப்பட்ட புதிய தமிழை […]

Read more

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா, மைக்கேல் ஸ்டென்சன், தமிழில்-எஸ். கண்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 270ரூ. புலம்பெயர்ந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. 18ம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போல இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார். எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று இங்குள்ள பஞ்சமும் பட்டினிச் சாவு, சாதிக் கொடுமையும் அவர்களை விரட்டியது. ஒப்பந்தக் கூலிகள் என்று […]

Read more

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ. தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது. ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, […]

Read more

சோழர் கால ஆடற்கலை

சோழர் கால ஆடற்கலை, ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 288, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-0.html ஆசிரியர் இலக்கியச் செல்வர் டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் புதல்வர். சிராப் பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ்பால் உற்ற காதலால் முதுகலைத் தமிழ் பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றிலும் முதுகலை நிறைவு. ஆடற்கல்வி கலைஞர்களும் கருவிகளும் அரங்கம் ஆடற்கலைஞர்களும், அவர் தம் வாழ்க்கையும் போன்ற தலைப்புகளில் சோழர் […]

Read more

சீனா அண்ணன் தேசம்

சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-8.html அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியவர்களைப் […]

Read more

காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு, பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 288, விலை 240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-925-9.html சர்வதேச சமூகத் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150. சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக […]

Read more

இந்திரா சந்திரா மந்திரா

இந்திரா சந்திரா மந்திரா, கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என்.பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 50ரூ பெரியவர்களுக்காக பல சிறந்த நாவல்களை எழுதியுள்ள கல்கி ராஜேந்திரன், சிறுவர்களுக்காகவும் பல்வேறு புனை பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார். ஜெயந்தி என்ற புனை பெயரில் அவர் எழுதிய இந்திரா சந்திரா மந்திரா என்ற நாவல் கோகுலத்தில் தொடர்கதையாக வெளிவந்தது. இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. சிறுவர் சிறுமிகள் புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்கும்வரை கீழே வைக்க மாட்டார்கள். அவ்வளவு விறுவிறுப்பு. நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 83 84 85 86 87 104