சாதேவி

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ. வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் […]

Read more

தேவதையைத் தொலைத்தவன்

தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம், விலை 100ரூ. காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை! வந்ததும் போய்விட்டாய்! நான் கரை! எங்கே போவது? என் கண்ணீர் வற்றிவிட்டது! உன் கண்களைக் கொஞ்சம் தா! அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் […]

Read more

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி, சதானந்தன் பேப்பர் மார்ட், சென்னை, விலை 100ரூ. சிவாஜிகணேசன், விளம்பரப்படுத்திக் கொள்ளமல் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்று கூறுகிறார் நூலாசிரியர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம். சிவாஜி வழங்கிய நன்கொடைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார். புத்தகத்தின் அமைப்பை பாராட்ட வேண்டும். ஒருபக்கம் சிவாஜியின் படம், அடுத்தபக்கம், அவரைப் பற்றிய விவரங்கள். சிவாஜியின் நவரச நடிப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் படங்களை கவனத்துடன் தேர்வு செய்துள்ளார் ஆசிரியர். சிவாஜி பல்வேறு கட்சித் தலைவர்களுடன இருக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- […]

Read more

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள்

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள், கவின் மீடியா ஓர்க்ஸ், சென்னை, விலை 50ரூ. கடும் உழைப்பும், ஆர்வமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார், காரையடி செல்வன். புத்தகத்தின் பெயர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சூட்டப்பட்டிருந்தாலும், அதை எளிமையாகக் கூறினால் வெற்றி பெற்றவர்கள் வரலாறு என்றே கூறவேண்டும். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களை பேட்டிகண்டு, வெற்றியுடன் ரகசியத்தை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு, இந்தப் புத்தகம் சிறந்த டானிக். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- சொல்லுக்குள் ஈரம், வானதி பதிப்பகம், […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஜாக்குவஸ் மர்மமான முறையில் தாக்கப்படுகிறார். அவர் இறக்கும் முன், தனது வயிற்றில் சில சின்னங்களையும் ரகசிய எண்ணங்களையும் ரத்தம் கொண்டு எழுதிவைத்து இறக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள், புதிர்கள், மர்மங்கள் ஆகியவற்றோடு சில வரலாற்று சான்றுகளாலும் சுவாரசியமாக பின்னப்பட்டுள்ள இந்த நாவல், உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் பலத்த எதிர்ப்புகளையும் ஒரு சேரக் குவித்து சாதனை படைத்தது. […]

Read more

வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள்

வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள், அர்துர் எம்.சிசிங்கர், ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் அமெரிக்காவின் இடதுசாரிகள் அர்துர் எம்.சிசிங்கர் எழுதி, ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் வெளியிட்ட வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். அமெரிக்காவில் நிலவும் மேல்தட்டு பொருளாதாரம் – ஆயுத அரசியல் – பெரும் முதல் என்ற கொள்கையில் இருந்து மாறுபட்டு சிந்தித்தவர், கென்னடி. அவர் இடதுசாரி கொள்கையாளர் அல்லர். ஆனால் அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையில் இருந்து மாறுபட்டதால், அந்த […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

புறநானூறு (பழைய உரையுடன்)

புறநானூறு (பழைய உரையுடன்), டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 806, விலை 400ரூ. சங்க இலக்கியம், எட்டுத்தொகையில் ஒன்று புறநானூறு. அதன் முதற்பதிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா., வால், 1894ல் வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு, புதிய பல இணைப்புகளுடன், எட்டாவது பதிப்பாக 2014ல் வெளிவந்துள்ளது. புறநானூறு மூலம் மட்டும், புறநானூறு மூலமும் உரையுமென்று, எத்தனை எத்தனையோ பதிப்புகள், வேறு வேறு நிறுவனத்தாரால் வெளிவந்துள்ளன. பழந்தமிழகத்தின் வரலாறு, கலை, தொழில், வாணிகம், கல்வி, ஆட்சி, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற பலவும் புறநானூற்றில் பொதிந்து […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more
1 576 577 578 579 580 841