பாடங்கள் படிப்பினைகள்

பாடங்கள் படிப்பினைகள், டாக்டர் எஸ். ஜீவராஜன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 19, விலை 90ரூ. இந்த நூலின் நூலாசிரியர் டாக்டர் எஸ். ஜீவராஜன் பாலியல் நிபுணர். மருத்துவம் தொடர்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின் இந்தப் புத்தகம் அவரது வழக்கமான படைப்புகளில் இருந்து சிறிது வித்தியாசப்பட்டுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த, படித்த சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்துள்ளார். சளித் தொல்லையில் மூச்சுத் திணறி அழுதபடியே இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடுக்கை அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தனர் அதன் […]

Read more

கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ. புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் […]

Read more

மேடை நமதே

மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ. சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.   —- போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ. மத சார்பின்மை பற்றி புதிய […]

Read more

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ. இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். […]

Read more

கந்தபுராணக் கதைகள்

கந்தபுராணக் கதைகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ. சூரபத்மனை வதம் செய்ய முடிவு எடுக்கும் சுப்பிரமணியர், அவனிடம் வீரபாகு தேவரை தூது அனுப்புகிறார். சூரபத்மன் மிகக் கொடியவன். வீரபாகு தேவரை அலட்சியம் செய்கிறான். இறுதியில் சூரபத்மனை சுப்பிரமணியர் கொன்று, அவன் உடலின் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை வேலாகவும் ஏற்கிறார். இதை சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர் குஹப்பிரியன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- வலி தாங்கும் மூங்கில், ஞா. சந்திரன், பாவை வெளியீடு, சென்னை, விலை 70ரூ. வாழ்க்கையில் மனிதர்கள், […]

Read more

சித்தம் சிவம் சாகசம்

சித்தம் சிவம் சாகசம், இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 160ரூ. தமிழகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் பற்றியும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சித்துக்கள் எந்த அளவு உண்மையானது என்பது பற்றியும் விறுவிறுப்புன வார்த்தைகளால் கொடுத்து இருககிறார் ஆசிரியர். குறிப்பாக போகர், கருவூர் சித்தர், திருமூலர் போன்றவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- இனிமையான என் கிராமத்து கனவுகள், சிவ. வடிவேலு, மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 55ரூ. பாமரர்கள், வானம், தேடல் போன்ற 54 […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல்

பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பெண் விடுதலை, தமிழ் மொழி வளர்ச்சி, சுயமரியாதை, பொதுவுடைமை, கைம்பெண் கொடுமை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதி புரட்சிக் கவிஞர் எனப் புகழ் பெற்றவர் பாரதிதாசன். அவர் எழுதிய முதல் கவிதை தொடங்கி இறுதிக்கவிதை வரை அத்தனைக் கவிதைகளையும் எழுத்தாளர் கே. ஜீவபாரதி ஆய்வு செய்துள்ளார். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை கோடிட்டு காட்டியிருப்பது நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. […]

Read more

ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம், மருதன், கல்கி பதிப்பகம், விலை 40ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-340-2.html உங்கள் குழந்தைகளுக்கு சுவாரசியமான, ஜாலியான, அட்டகாசமான கதைகளைச் சொல்ல வேண்டும் என்றால், அவசியம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும். இந்தக் கதைகளைக் கேட்டால் குழந்தைகளே ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நன்றி: கல்கி, 7/9/2014.   —- முதலுதவி, டாக்டர் கு. கணேசன், கல்கி பதிப்பகம், விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-7.html நமக்கு முதலுதவி […]

Read more

ரோஜா நிறச்சட்டை

ரோஜா நிறச்சட்டை, அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-0.html அன்றாடத்தின் கதைகள் ஆசிரியரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. புரியாத பிரச்சினை கதையில் இன்றைய தவிர்க்க முடியாத இருபாலர் கல்வி, தலைமுறை இடைவெளி போன்ற விவகாரங்கள் அலசப்படுகின்றன. மற்ற ஆடவருடன் யதார்த்தமாக மகள் பழகுவதைப் பார்த்து தந்தை பதறுகிறார். சந்தேகிக்கிறார். கடன் கொடுத்தவன் கலங்கும் விதம் சொல்கிறது இருபது ரூபாய் கதை. துக்கடா விஷயங்கள் என்று நாம் கருதுபவை, […]

Read more
1 638 639 640 641 642 841