குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு, முனைவர் நித்யா அறவேந்தன், காவ்யா, பக். 176, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-7.html சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, […]

Read more

நீ தெய்வீகமானவன்

நீ தெய்வீகமானவன், சுவாமி விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பதிப்பகம், பக். 448, விலை 200ரூ. விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டில் வெளியான சிறப்பான தொகுப்பு நூல். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், சோர்ந்த தனிதனை எழுப்பி, சாதனை செய்ய வைக்கும் தீப்பிழம்பை எழுப்பும் சக்தி கொண்டவை. ராம கிருஷ்ணமடம் வெளியிட்ட எழுந்திரு விழித்திரு என்னும் 11 பாகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பரவசம் தரும் புதுநூல். இயற்கை, இறைவன், ஆன்மா பற்றிய விளக்கமும், படைப்பு என்ற தலைப்பில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிராண சக்தி பிரபஞ்சம் முழுவதும் […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 70ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம் புகுந்து வெற்றி கண்ட தமிழர் தளபதிகள், அதியன் துவங்கி, குதிரை மலைப்பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், வில்லவன் கோதை, பரஞ்சோதியார், கருணாகரன் இவ்விதமாக 16 தளபதிகளின் சுருக்க […]

Read more

திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு

திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு, கோட்டா நீலிமா, மணிஜல் பப்ளிசிங் ஹவுஸ் (பி) லிட், 7/32, தரைத்தளம், அன்சாரி ரோடு, தர்யாகனிஜ், புதுடில்லி 110002, பக். 275, விலை 199ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-183-9.html கலியுக தெய்வமாகத் திகழும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் குறித்த விவரங்கள் அனைத்தும், இந்நூலில் உள்ளன. அனைத்துப் பாவங்களையும் போக்குபவன் என்று நினைத்தே, மக்கள் வேங்கடாசலபதியை வணங்குகின்றனர். இதற்கு ஆதரவாக இந்நூல் பல செய்திகளையும் கூறுகிறது எனலாம். திருப்பதியின் தோற்றம், சுவாமி வேங்கடாசலபதியின் தத்துவம், […]

Read more

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 176, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-862-4.html மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூரார் பி. ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக, எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இரண்டாடுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், இன்றளவும் ஓமந்தூராரின் நிர்வாகத்திறமை போற்றப்படுகிறது. அதனை பல சான்றுகளோடு விளக்குகிறார். நிர்வாக பயிற்சி ஏதும் இல்லாது, ஆட்சியில் அமர்ந்து அரிய சாதனை படைத்த ஓமந்தூராரை, நேரு […]

Read more

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை, பூங்குன்றம் நா.க.ராமசாமி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 128, விலை 50ரூ. நூலாசிரியர் சைவத் திரு நா.க.ராமசாமி, சைவ சமய சாத்திரங்களில் ஆழப்புழமை நிறைந்த பெருமகனார். மூத்த சைவ ஆதினமான திருவாவடுதுறை திருமகா சன்னிதானத்தின் அருளாசியை முழுமையாக கைவரப் பெற்ற அறிஞர். ஆன்மிகம் அறிவோம் என்ற இவரது நூலில் சைவ சமய உட்கருத்துக்களை கேள்வி பதில் வாயிலாக மிக அருமையாக எளிய தமிழில், நூலாகத் தந்துள்ளார். முகப்பு என்ற தலைப்பிட்டுத் துவங்கி முடிவு என்ற தலைப்போடு, 250 […]

Read more

தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்)

தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்), முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சுவாமி தயானந்தா அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், பக். 570, விலை 1000ரூ. திருத்தொண்டர் புராணத்தை வரலாறாக பதிவு செய்தவர் தெய்வத்தமிழ் சேக்கிழார், பெரியபுராணம் வரலாற்று ஆவணம். அலகில் சோதியன், அம்பலத்தாடுவானின், அன்பை விளக்கும் அருள் நூல். முதல் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். அப்போது குலோத்துங்க மன்னன் ஆட்சி இருந்தது. அம்மன்னன் மகன், சேக்கிழார் காலத்தில், அத்திருத் தொண்டர் புராணத்தை, கலை நுட்பத்துடன் வடித்தெடுத்த அருமை. தராசுர சிற்பங்களில் இன்று ஆவணமாக திகழ்கிறது. கயிலையில் துவங்கி, […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 182, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-1.html மயில், குயில், குருவி, கிளி, புறா, காகம், ஆந்தை, மரங்கொத்தி, உள்ளான், முக்குளிப்பான் என தமிழகத்தில் அதிகம் காணப்படுகிற 328 பறவைகளைப் பற்றிய நூல். அவற்றின் உடல் அமைப்பு, நிறம், குரல், குணம், உணவு, வாழுமிடம், இனப்பெருக்க காலம், கூடுகள், முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடக்கிற அரிய நூல். குழந்தைகள், பள்ளி, கல்லூரி […]

Read more

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-2.html 1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக […]

Read more
1 699 700 701 702 703 841